தொ

தொட முடியவில்லை.
கடலுள்ளே சென்றவர்
கரைநோக்கி வருவாரோ
என்ற புதிருக்கும்
விடை தெரியவில்லை.
கொட்டும் அருவி அருகில் இருந்தும்
குதிக்க சிறிதும் மனமில்லை.
அருகில் மெதுவாய் கடந்து
செல்லும் மனிதர்கள்
யார் என அறியவில்லை.
சீறிப்பாயும் வண்ணச் சிதறல்களை
அள்ளி பூச ஆசையும் இல்லை.
கண்விரித்து, வாய் பிளந்து
இத்தனை ஆச்சரியங்களை
ஒரு சேரகாணும் எனை யாரும் பார்க்கவில்லை.
தன்நிலை மறந்து
பிறநிலை அடைந்த நான் யார் என
எனக்குள் எழும் கேள்வி,
இயற்கையின் நல் ஓசைக்கிடையே
அபஸ்சுவரமாய் என் காதுகளில் மட்டும்
ஒலிக்கக் கேட்டேன்..
No comments:
Post a Comment