Monday, May 6, 2019

இப்படிக்கு விகாரி !

இப்படிக்கு விகாரி !
என் பெயர்
என்னவோ
விகாரி தான்!
மனித குலத்தின்
விகாரத்தையும்
வக்கிரங்களையும்
அக்கிரமங்களையும்,
அழிக்க நான் எடுத்த
வடிவம் இது!
எடுத்த காரியம் முடித்தப் பின்
எழில்வடிவெடுப்பேன்.
சார்வரியாவேன்!
எழில் வடிவிலும்
வீறுகொண்டெழுவேன்!
மனிதனும்
அவனுள்
மனிதமும் தழைக்க
நீங்கள் யாவரும்
பதினாறும் பெற்று
பெறுவாழ்வு வாழ
என் ஆசிகள்!
--இப்படிக்கு
நல்லோர் வாழ வழி செய்ய வந்திருக்கும்
உங்கள் அன்பு
விகாரி.......

No comments: