Monday, May 6, 2019

போதி மரம்


No photo description available.
போதி மரம்
”நான் அமைதியாய்
தியானம் செய்ய
போதி மரம் இல்லையே”
என என் புத்தன் கேட்டான்.
நீயேன் மரத்தின் கீழ் உட்காருகிறாய்?
போதி மரத்தையே உன்
காலடியில் கொண்டு
வைக்கிறேன் என்றேன்.
போதியின் கீழ்
உட்கார்ந்தால்
என் புத்திக்கு பரவசம் என்றான்.
நீ தான் முற்றும் துறந்தவன் ஆயிற்றே
உனக்கு ஏன் பரவசம் மேல் ஆசை என்றேன்!
புத்தியை வசப்படுத்த
போதியே வேண்டும் என்று அடம்பிடித்தான்.
புல் கூட முளைக்காத ஊரில்
போதிக்கு எங்கு செல்வேன்?
கல்லிலே போதியை வளரச்செய்து
அவன் காலடியில் சமர்பித்தேன்!
அவனுக்கு தெரியவில்லை
நிஜத்தில் பார்ப்பதை விட
படத்தில் பார்த்தே
பரவசப்படும் கூட்டம் நாம் என்று!

No comments: