ஒரே சாரம் !!
தோழி சுஜாவுடன் ஆன ஒரு காரசார உரையாடலில் சிலைகள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது நான் ஒரு குறிப்பிட்ட கலை நுணுக்கத்தை கூறி ,உடனே “ எனக்கு அந்த மாதிரி கண்கள் இருந்தால் பிடிக்கவே பிடிக்காது “, என்று கடினமாக கூறினேன். அதற்கு அவள் நிதானமாக” ஆமாம் எனக்கும் அந்த மாதிரி கண்கள் இருக்கும் சிலைகளை ரசிக்க தோனாது”, என்று அழகாக கவிதையாய் கூறினாள்.
ஒரு நிமிடம் நாங்கள் பேசி வந்த சாரத்தை விட்டு விலகி அவளின் வார்த்தைகளை யோசிக்க ஆரம்பித்தேன். இரண்டு பேருக்குமே ஒரு விஷயம் பிடிக்கவில்லை . ஆனால் அவள் அதையே எவ்வளவு அழகாக வெளிப்படுத்தினாள்! நான் எப்படி கடினமாக என் நிலையை வெளிப்படுத்தினேன்! எந்த ஒரு விஷயத்தையும் நாம் ரசிக்கும் போது எப்படி எல்லாம் சிரத்தை எடுத்து அதனை மெருகூட்டி நம் ரசனையை வெளிப்படுத்துகிறோமோ அதே சிரத்தையை உபயோகப்படுத்தி நமக்கு பிடிக்காத , உடன் பாடு இல்லாத விஷயத்தை கூட அழகாக இல்லாவிட்டாலும் அசிங்கமாக , பிறர் மனம் நோகாமல் அழுத்தமாக ஆணித்தரமாக வெளிப்படுத்தலாம் அல்லவா? மாற்றம் என்பது நாம் மனது வைத்து ஏற்படுத்திக் கொள்வது தானே ?
சாரம் ஒன்று தான் ! விகிதாசாரம் தான் வெவ்வேறாகி போனது!
No comments:
Post a Comment