Wednesday, January 31, 2018

நீல நிலவழகி (Blue Moon)

நீல நிலவழகி


(Blue Moon)
நிலவழகி தன்
ஒற்றை கீற்று நெற்றியை
மட்டுமே காட்டினாள்.
தன் விரல்கள் கொண்டு
அழகிய முகம் மூடினாள்.
காத்திருந்த கண்களுக்கு
கண்ணாமூச்சி காட்டிவிட்டு
மேகப்போர்வைக்குள்
சென்று மறைந்தாள்.
இழுத்து மூடிய போர்வைக்குள்
என்ன செய்கிறாள்?
வெட்கப்பட்டு சிரிக்கிறாளா?
தன் காதலுடன்
காதல் வயப்பட்டு
கொஞ்சி மகிழ்கிறாளா?
நல்லதொரு கனாக்கண்டு
உறங்கிப் போனாளா?
தியானம் தான்
செய்கிறாளா?
முழு நீல நிலவழகி!
காணக் கிடைக்காத எழிலரசி!
கண்ணம் சிவந்த பேரழகி!
என அந்த எழில் ஓவியத்தை
அங்கம் அங்கமாய்
முழு நீலப்படம் போல
படம் பிடித்து
ஊராருடன் பகிர்தல்
பிடிக்காமல்
சின்னதாய் சினம் கொண்டு
போர்வைக்குள் மறைந்தாளோ?
மனிதர் யாவரும்
போர்வைக்குள் புதைந்து
போனபின்பு தான்
அவளும் அழகாய்
உலாவருவாள்!
அவளும் பெண்ணாய் பிறந்துவிட்டாள்
மதிப்போம் அவளின்
தன்மானத்தை!
போற்றுவோம் அவளின்
சுதந்திரத்தை!!

No comments: