........
காலச் சக்கரம்
அரிசியில் கல் இருக்கிறதா என்று பார்க்க கண்களுக்கு கண்ணாடியின் உதவி வேண்டும் வயது வந்தாகிவிட்டது. நினைத்துக் கூட பார்க்கவில்லை இது இவ்வளவு சீக்கிரம் வரும் என்று. இப்பொழுதுதான் அம்மா அரிசியில் கல் பொறுக்க கண்ணாடியை எடுத்து வா என்று கூறியது போல் உள்ளது. அதற்குள் நான் என் கண்ணாடியை தேடும் நேரம் வந்துவிட்டது. அம்மா கண்ணாடி போட்டு அரிசியை துழாவியதை ஒவ்வொரு முறை பார்த்த பொழுதும் மனதுக்குள் ஒரு திக் வந்து மறைந்ததுண்டு. இன்று என் மகளும் அதே அதிர்ச்சியில் உரைகிறாள். காலச் சக்கரம் வேகமாகவே சுழல்கிறது. என் தாய் கடந்து வந்ததை நான் கடப்பதைப் போன்று அவளும் நான் கடந்து வந்ததை கடக்கும் நாள் வரும். அக்காலத்திற்குள் என்னால் முடிந்த கற்களை நான் பொறுக்கியாக வேண்டும் விரைவாக..
No comments:
Post a Comment