Friday, August 10, 2018

சிறு அடி!

சிறு அடி!
ஒரு வித்தையை கற்கயில்
நான் ஒர் குழந்தை!
முதல் அடி பயம் கலந்த தடுமாற்றமே!
இரண்டாமடி எடுக்கையில்
விழவும் செய்கிறேன்!
மூன்றாம் அடி எடுக்கையில்
காயப்படுகிறேன்!
என்னை கைப்பிடித்து, தட்டிக்கொடுத்து
அன்பாய் அரவனைத்து
வழிநடத்துவோர் பலர்.
சிலரோ குட்டி குட்டி
எழவிடாமல் கால் டற செய்கின்றார்.
அன்பு மொழி பேசி ஊக்குவிப்பார் பலர்.
செம்மொழியாம் எம்மொழியில்
தேடித் தேடி அலைந்து
தீஞ்சொற்கள் சில பொருக்கி
வீசி எறிந்து சுடப்பார்ப்பார் சிலர்.
என் அடி வலி அறியாதார்
எள்ளி நகையாடுகின்றார்!
அதை தூக்கி எறிந்துவிட்டு
என்வழி நான் நடக்கின்றேன்!


நான் ஒரே இடத்தில் நின்றுவிட்டால்
பாசிபடர்ந்த குட்டைநீர் ஆவேன்.
மலையையும், காட்டையும் தாண்டி
கற்களிலும், முற்களிலும் உரசி
ஓடிக்கொண்டே இருந்தால்
தெளிந்த ஆறாவேன்!

நான் கடல் சேறும் ஆற்று நீர்!
என்றைக்காவது ஓர் நாள்
அப்பெரும் கடல் சேறுவேன்.
என் ஓட்டம் மெதுவாக இருக்கலாம்
ஆனால் அதன் உயிரோட்டம் நின்றுவிடாது!
நான் இடறி விழுகையில்
கரம் நீட்டி தூக்கும்
தாய் மடி சேர்வேனேத் தவிர
முகமூடி அணிந்து
உலாவரும் பேயிடம்
தஞ்சம் புகமாட்டேன்!
கால் ஆட்டி தூங்காவிட்டால்
சவமென்று குழிசேர்க்கும்
மாந்தர் தம் மத்தியிலே
மனிதம் தேடுவது மடமை!
பயம் என்று இல்லையெனில்
இடர் என்பதும் மறைந்தே போகும்!
நான் ஒன்றும்
தடம்பதிக்க விரும்பவில்லை,
தடமாக ஆசையில்லை!
எத்துனை முறை
விழுந்தாலும் வீழ்ந்தாலும்
ஓய்வெடுக்க மனமில்லை!
வாழும் நாள் வரை
சிறு அடி
எடுத்து வைத்துக்கொண்டே இருப்பேன்
வாழ்தலின் நினைவாக!!

No comments: