Tuesday, October 5, 2010

எந்திரன் விமர்சனம்

சிறப்புச் செய்தி:


உலகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கும் எந்திரன் சுறாவளி ஒரு வழியாக எங்கள் வீட்டுக்கரையை நேற்று மாலை கடந்து சென்றது.

நேற்று மாலை 5.45 மணி காட்சிக்கு எந்திரன் படம் பார்க்க குடும்பத்துடன் சென்றோம். திரையரங்கில் அலையென மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. எங்கு பார்த்தாலும் நண்டு சிண்டுகளுடன் அனைவரும் குடும்ப சகிதமாக வந்திருந்தனர். நாங்களும் எங்கள் பங்கிற்கு ஒரு எக்ஸ்ட்ரா லார்ஜ் பாப்கார்ன் மற்றும் இத்தியாதி, இத்தியாதிகள் வாங்கி கொண்டு படம் பார்க்க சென்றமர்ந்தோம். படம் ஆரம்பித்தவுடன் நாகரீகம் கருதியா என்று தெரியவில்லை ஆனால் ரஜினி ரசிகர்கள் பலர் இருந்தும் யாரும் விசில் அடிக்கவில்லை. சத்தம் போடவில்லை. படம் நிசப்தமாக ஆரம்பித்து ஏறக்குறைய மூன்று மணி நேரம் என் பொறுமையை சோதித்து இனிதே முடிவுற்றது. படம் பார்க்க உள்ளே சென்றபொழுது இருந்த ஆர்வம்,ஆரவாரம் படம் பார்த்து விட்டு வெளியே போன பலரிடம் காணாமல் போனது. அது படம் பற்றிய ஏமாற்றத்தினாலா அல்லது படம் பார்த்து களைத்துவிட்டதால் ஏற்பட்டதா என்று தெரியவில்லை. வெளியே வந்த என் காதுகளில் “ரிங்” என்ற சத்தம் சிறிது நேரத்திற்கு ஒலித்துக் கொண்டே இருந்தது. I could hear the clashing of metal sound for quite some time. எனக்குத்தான் இப்படி ஆனால் என் கணவரின் முகம் அன்று மலர்ந்த ரோஜாவாக சந்தோஷமாக காணப்பட்டது. அவருக்கு படம் பிடிக்காவிட்டால் கூட அதை ஒத்துக்கொள்ள மனம் வராது. ஏன் என்றால் அவர் ஆத்மார்த்தமான ரஜினி ரசிகராயிற்றே!! நானும் ரஜினி ரசிகை தான் ஆனாலும் எனக்கு வடிவேலு ஸ்டைலில் “அப்பாடா கண்ணை கட்டிடுச்சுடா சாமீ......”


சரி எந்திரன் சூறாவளி என் மனதில் விட்டுச்சென்ற சுவடுகள் இனி இங்கே உங்களுக்காக.......

அழியாத சுவடுகள்::


1. அழகான பாடல் காட்சிகள்.

2.ரகுமானின் மனதை கவரும் இசை.

3.கடைசி இருபது நிமிடங்கள் “சிட்டி” ரஜினியின் ஆர்ப்பரிப்பான நடிப்பு.

4.பிரம்மாண்ட க்ளைமாக்ஸ்.

5. சங்கரின் தொழில் நுட்ப அறிவு.

6. இந்த வயதிலும் ரஜினியின் தொழில் பக்தி.

7. படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களின் உழைப்பு.

8.ஆங்கில படம் போன்ற தமிழ் படம்.

9.ஒரு நொடியில் பல புத்தகங்களை ஸ்கேன் செய்து நினைவில் நிறுத்திக்கொள்ளும் ரோபோவின் திறன் என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது.மறையக்கூடிய சுவடுகள்::1. முதிர்ச்சி தெரியும் ரஜினியின் முகம்.

2.என்ன தான் உலக அழகியாக இருந்தாலும் உடலழகில் மார்க்கண்டேயனாக சிக்கென இருக்கும் ஐஸ்வர்யாவின் முகத்தில் பல கோணங்களில் தெரிகிறது வயதின் முதிர்ச்சி.

3.வேகம் குறைந்த ரஜினியின் நடை.(இதற்கு மேல் ஒரு அறுபது வயதுகாரரிடம் எதிர்பார்ப்பது தவறுதான்.ஆனால் என்ன செய்வது படத்தின் கதாபாத்திரத்திற்கு வேகம், இளமை தேவையாய் இருக்கிறதே)

4.படம் முழுதும் நட் ,போல்ட், மெஷின் பற்றிய வசனங்கள்தான் மிகுதி.

5.கணினி அறிவு இல்லாத சாதாரண மக்களுக்கு எவ்வளவு தூரம் இந்த concept புரியும் என்று தெரியவில்லை.(neural schema போன்ற வார்த்தைகள் க்ரீக்,லாட்டின் போன்று இருந்தது.)

6. ரஜினி,ஐஸ்ஸை காதல் ஜோடியாக கற்பனை செய்வதில் கொஞ்சம் கஷ்டம்.

7.நகைச்சுவை மிகமிக குறைவு. ரஜினி படம் என்றாலே ஜனரஞ்ஜகமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. பொதுவாக ரஜினி படங்களில் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. இதில் ஒன்றிற்கு இரண்டு நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் நகைச்சுவை வறட்சி.

8.ஒரு பெயர்ப்பெற்ற விஞ்ஞானியின் உதவியாளர்கள் என்ற பெயரில் சந்தானம்,கருணாஸை கேளித்தனமாக உலா வர செய்தது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.They both became comedy pieces.

9.படம் முழுதும் உலோகங்களின் உரசல் சத்தம். கடைசி இருபது நிமிடங்கள் காது கிழியும் உலோக போர் சத்தம். Transformer, Terminator படம் பார்ப்பது போல் இருந்தது.

10.ஏகத்திற்கு வாரி இரைக்கப்பட்டிருக்கும் பணம்.

11.தனக்கு தெரிந்த அணைத்து computer gimmicks யையும் சங்கர் பயன்படுத்திகொள்ள ஏற்படுத்தப்பட்ட களம்.

12.சாவி கொடுத்த பொம்மை போல் உணர்ச்சியற்ற ஐஸ்வர்யாவின் நடிப்பு.

13.நீட்டி முழக்கி மூன்று மணி நேரம் படத்தை இடைவேளை இன்றி ஓடவிட்டு கொடுமை படுத்தியிருப்பது.

14.மற்ற எல்லா படங்களையும் விட அதிகமான டிக்கெட் கட்டணம்.

15.மனதில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாத ஒரு கதை கரு.

16. கதை மொத்தமும் ரஜினி என்ற சாமியை சுற்றியே அங்கப்பிரதட்சனம் செய்கிறது.

17.இருந்தும், மொத்தத்தில் இது ரஜினிக்கான களம் இல்லை.


படத்தை பார்த்த ஆண்கள் பலருக்கு படம் பிடித்திருந்தது. ஆனால் பெண்களுக்கு ஏமாற்றமே. இதை நான் மட்டும் சொல்லவில்லை. பல பேரிடம் கேட்டு அறிந்த பதில். அவர்களுக்கும் சேர்த்தே நான் எழுதியுள்ளேன். சிறுவர்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் பிடித்திருக்கும் ஆனால் சிறுமிகளுக்கு பிடித்ததாக கேள்விபடவில்லை. Barbie doll loversயை ரோபோ லவ்வர்ஸ்களாக ஆக்குவது கடினம். கூட்டி கழித்து பார்க்கும் பொழுது புரிவது Men are from Mars and Women are from Venus. பொதுவாக பெண்களுக்கு உணர்வு பூர்வமான, உணர்ச்சிபூர்வமான படங்கள் தான் பிடிக்கும். எனவே கண்களை கட்டிய நீதி தேவைதையாக சுவடுகளை தராசில் நிறுத்து உங்கள் தீர்ப்பை முடிவு செய்யுங்கள்... பணத்தை மிச்சப்படுத்துங்கள்.

15 comments:

வல்லிசிம்ஹன் said...

60 வயது ஹீரோ. 38 வயது ஹீரோயின்.
பாவம்தான் நாமெல்லாம். ரஜினி மாஜிக் வேலை சில இடங்களில் செய்யலாம். உங்கள் பதிவின் தராசு சரியாகவே இருக்கிறது.எங்களுக்கும் ரஜினியை ரொம்பவே பிடிக்கும். ஆனால் அவரைக் கஷ்டப்படுத்தாத பாத்திரங்களில் நடிக்கவைத்தால் இன்னும் ரசிக்கலாம்.

Anonymous said...

rajani kku janaranjaga padangal nalla porunthum... enthiran mathiri ilama nalla janaranjaganamana padangal aver nadikanum enthiran
shanker da athi meethavi thanam.

dhanaraj said...

Rajani padam partha mathiri ila.. etho panam selavalicha, bramandatha katina tamil cinema rasigargal emanthuduvanga padatha aaaha ooho nu pugaluvanganu shanker thappu kankku pottutar...
rajani la oru pelium ila rajani ku porunthatha story sorry athula than storyie ilaye poruntha tha padam...
eppadium padam nalla odum sun tv da velambaram matrum rajani da mass katayam ellam padam parppam ana rajani padam partha therupthi yarukkum kedikkathu...
entha oru padamum parthutu veliula varum pothu ethavthu orukku feeling namakku varanum love or action or comedy or sogam , or nambikka or ethavathu oru fun eppadi ethuvum ilama thalavali oda vantha appuram enna padam athu...
rajanikanthukku oru request thayavu siuthu oru janaranjaga padam onu panni makkala santhosa paduthanum..

inum oru santhegam ithu arasiyal karanama kuda irukkalam rajanikanth ku makkal mathiula irukura selvakku makkalukku ethum pannura mathiri padam nadicha athigamagum.. ipadi padam panina satharana makkalta pogathu appa averda makkal selvakku kurium nu plan pani ipadi padam nadikka vachangalo theriyathu...
ellarukkum rajanikanth a romba pedikum athan aver ipadi sothappal padam paninathu kavaliya irukku..

dhanaraj said...

Artificial Intelligence intha film mathiri shanker sir enthiran edukka try pani irukkar but miss agiduchu...

Jegan said...

அனால் சுஜாதாவுக்கு உரிய மரியாதை செய்யப்படவில்லை என்பது என் கருத்து. மலேசியா நிகழ்ச்சியில் கூட ஷங்கர் எல்லா டெக்னீஷியன் யும் விரிவாக பாராட்டினார். அனால் சுஜாதாவை பெயரை போகிற போக்கில் அவர் உச்சரித்தார்.

Geetha Ravichandran said...

மக்கள் யதார்த்தமான படங்களை ரசிக்க ஆரம்பித்துள்ள இக்காலகட்டத்தில் இப்படம் மிகுந்த செயற்கைத்தனம். காதில் பூ சுற்றவில்லை, ஒரு பூந்தோட்டத்தையே நம் முதுகில் வைத்து கட்டி அனுப்புகிறார்கள் படத்தின் முடிவில். ஒன்று முழு நீள ஆக்‌ஷன் படமாக இருக்கவேண்டும் இல்லை தத்ரூபமான படமாய் இருக்க வேண்டும். இது ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் கதையாக இருக்கிறது. சுருங்க சொல்லப்போனால் சங்கர் பிள்ளையார் பிடிக்க போய் குரங்காகிப் போனது.

SADIQUE said...

IF U HAVE WRITTEN THIS REVIEW SOON AFTER WATCHING THE MOVIE... ITS NOT A GOOD REVIEW! REWIND BACK THE SCENES FROM LAST TO FIRST... LOOK UP THE EFFORT... THEN U WILL FEEL THE MAGIC! AT FIRST IT WILL GET MIXED REVIEWS, BUT THERE IS SOMETHING SPECIAL CALLED, "RAJNI'S MAGNETIC POWER" THAT WILL ATTRACT REPEAT AUDIENCE, ESP. FAMILY & KIDS.

UNFORTUNATELY THIS IS NOT THE MOVIE FOR DIE-HARD RAJNI FANS. BUT, THEY WILL ALSO SOON ACCEPT HIS NEW AVATAR.

SADIQUE said...

HERE IS A DETAILED & GENUINE REVIEW FROM MY POINT: PLEASE PUBLISH.

http://madurailover.blogspot.com/2010/10/endhiranthe-robot-movie-review.html

Geetha Ravichandran said...

Sidique--The review is from my point of view. It is upto u to decide whether u like the movie or not. I have no say in it.According to me it doesn't appeal to the normal crowd. I don't think the concept will reach the ordinary folks.

priya.r said...

ஆமாம் கீதா ! நான் கேட்ட வகையிலும் விமர்சனங்கள் படத்தை
சுமார் இரகம் என்று தான் சொல்கின்றன .,
விடுங்க கீதா! படத்துக்காக செலவழித்த பணத்தை மொய் வைத்த மாதிரி நினைத்து கொள்ளுங்கப்பா!
அப்புறம் எங்க கார்த்திக் காலாண்டு தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் சுமார் தான் :உங்க ரிஷி எப்படி ?!

Chelian said...

a different point of view in a rather feverish state of mass marketing frenzy kindled by SUNTV. It is a after all a movie. I haven't seen it yet. But this review puts things in perspective.

Thank You Geetha, I am a big Rajni fan but of late he is a mass marketing product like Mickey Mouse. I crave to see the Rajni who played the middle class hero who struggles to make ends meet in Bhuvana oru Kelvikuri or the loser husband in Aval oru Thodarkathai or the scary villain in Moondru moodichu. That actor was lost forever, incidentally only Balachandar saw his true potential, rest of them just used the charisma of Rajni. Some are great actors, some are just Mickey Mouses.

True acting of a 60 year old hero is Marlin Brando in Godfather, this is all just pure noise.

KK Karthikeyan said...

Geetha cafe vimarsanam 75% OK & 25% not OK.But,good analysis with different view.

Geetha Ravichandran said...

வல்லிசிம்ஹன்,தன்ராஜ்,ஜெகன்,
சிட்திக்,ப்ரியா, செழியன்,கார்த்திகேயன் ----உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
செழியன்- I totally agree with u. Till now I am Rajini fan but this movie didn't appeal to me . Miss those 70's Rajini style.Right time for him to shift his direction like Amitabh and do some different character roles. I would be happy to see again the old villain Rajini on screen though.

Anonymous said...

Movie length can be reduced as 2 hours.

Anonymous said...

Sorry for my bad english. Thank you so much for your good post. Your post helped me in my college assignment, If you can provide me more details please email me.