Sunday, September 19, 2010

ரசிகபக்தர்கள்

இன்று நாளிதழில் நான் படித்த செய்தி என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. “எந்திரன் படம் வெற்றி பெற வேண்டும் என்று வேலூர் ரசிகர் மன்றத்தினர் முட்டி போட்டு 1350 படிகள் ஏறி சாமி தரிசனம் செய்தனர்.”
எங்கே செல்கிறது நம் இளைஞர் சமூகம்? யாரோ ஒருவரின் வெற்றிக்காக இப்படி தங்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கலாமா?  ரசிகர்களாக இருக்கலாம் ஆனால் கண்மூடித்தனமான ரசிகபக்தர்களாக இருப்பதனால் இவர்களுக்கு என்ன பயன்?  யாருக்காக இப்படி செய்கிறார்களோ அவர் ஒரே வரியில் “நானா அப்படி செய்யச்சொன்னேன் ?” என்று கேட்டுவிட்டு அவர் தன் வேலையை பார்க்க போய்விடுவார்.  சுடும் வெய்யிலில் முட்டி தேய இவர்கள் தங்களை வருத்திக்கொண்டு இங்கு இவர்கள் வேண்டுதலை நிறைவேற்ற அங்கு யாருக்காக இவர்கள் வேண்டுகிறார்களோ அவர் ஏசி அறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பார்.   இவர்களுக்கு என்ன “அவார்டா’ கிடைக்கப்போகிறது? வேறு வேலைவெட்டி இல்லாத இவர்கள்  தங்களின் குடும்பங்களுக்காக கூட  இப்படி வேண்டிக்கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.  ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகள் நம் முன் தலை விரித்து ஆடிக்கொண்டிருக்க இவர்களுக்கு எது பெரிய வேண்டுதலாக இருக்கிறது பாருங்கள்.  இப்படி பட்ட இந்தியாவைத்தான் திரு.அப்துல் கலாம் அவர்கள் 2020ல் பார்க்க நம்மை கனவு காணச்சொன்னாரா? தெரியவில்லை.  வாழ்க்கையில் போராடி முன்னேர வேண்டும் என்று நினைப்பவர் எவரும் இப்படி நேரத்தை விரயம் செய்ய மாட்டார்கள்.  பொறுப்புள்ள யாரும் இப்படிப்பட்ட முட்டாள்தனமான செய்கைகளை செய்ய மாட்டார்கள்.  தங்களின் தாய் தந்தைக்காக இப்படி வேண்டிகொண்டிருப்பார்களா? நம் நாட்டை காக்க வெய்யிலிலும் குளிரிலும் போராடும் வீரர்களுக்காக அவர்களின் குடும்பங்களுக்காக இப்படி வேண்டியிருப்பார்களா?  அண்டை நாட்டில் அன்றாடும் உணவுக்கும் , உயிருக்கும் போராடும் நம் இனமாம் தமிழ் இனத்திற்காக இப்படி வேண்டுகிறார்களா? உலகம் முழுதும் ஒன்றும் அறியா குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதியை நிணைத்து அவர்களுக்காக ஒரு சொட்டு கண்ணீரேனும் வடிப்பார்களா?  இப்படி எத்தனையோ வேண்டுதல்கள் நமக்காக காத்திருக்க தேவை இல்லா ஒன்றிற்காக எதற்காக வேண்டுகிறார்கள்?  கடவுள் என்ன ஒன்றும் அறியாதவனா இதற்கெல்லாம் மயங்கிவிட??  யார் யாரை இப்படி  இங்கு ஏமாற்றப்பார்க்கிறார்கள் என்பதே தெரியவில்லை.   யாருக்கு இதனால் என்ன லாபம்?  பணக்கோடியில் புரள்பவர்கள் புரண்டுகொண்டுதான் இருக்கிறார்கள்.  தெருக்கோடியில் புரள்பவர்கள் புரண்டுகொண்டுதான் இருக்கிறார்கள்..எது எப்படி ஆயினும் முட்டி தேய்வது தான் மிச்சம்.  இவர்கள் எல்லாம் சமூகத்தின் எச்சம்.......  

11 comments:

subra said...

அய்யா களவாணி படம் பாருங்க ,நாயகன் குடிக்க
கும்மாளம் போட தன் தந்தை வெளிநாட்டில் உசிர
(ரொம்ப பேர் கொடுத்து விட்டார்கள் )கொடுத்து வேலை
செய்து அனுப்ற பணத்தை எப்படி வாங்குவன் தெரியுமா
கொடும சார் ,ஆனா அவன்தான் படத்தின் நாய்கன்,அப்புறம்
எப்படி அய்யா இந்த ரசிகனிடம்மட்டும் நல்ல அறிவுபூர்வமான
விடயங்களை எதிர்பார்ப்பது .அதுமட்டுமல்ல உங்களுக்குபதில்
பதிவு போடுவான்பருங்க அதவிட கொடும .வாழ்த்துக்கள் அய்யா

பிரியமுடன் பிரபு said...

யாருக்காக இப்படி செய்கிறார்களோ அவர் ஒரே வரியில் “நானா அப்படி செய்யச்சொன்னேன் ?” என்று கேட்டுவிட்டு அவர் தன் வேலையை பார்க்க போய்விடுவார்.
///

ஹ ஹா ரசினி நெரடியா சொல்ல மாட்டார் ,இப்படி செய்தால் அவர் மனம் கவரலாம் என நினைக்கும் சிலர் பலருக்கு பணம் கொடுத்து எற்பாடு செய்வார்கள்

பிரியமுடன் பிரபு said...

முதல் நாள் காட்ச்சிக்கு 1000 கணக்கில் கொடுக்கும் ரசிகன் தேவை என்பதால் நடிகனும்ம் கண்டுகொள்வதில்லை

Geetha Ravichandran said...

பிரபு--இவர்கள் ஏமாறுகிறார்களா அல்லது ஏமாற்றப்படுகிறார்களா??இதை அறிவீனம் என்பதா அல்லது மடமை என்பதா??

ஆ.ஞானசேகரன் said...

//கடவுள் என்ன ஒன்றும் அறியாதவனா இதற்கெல்லாம் மயங்கிவிட?? //

அட ஆமாம்....


என்ன செய்வதுங்க... எல்லா நாட்டிலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கதான் செய்கின்றார்கள்..... இதற்கெல்லாம் காரணம் கிடையாது ஏதோ ஒரு நாட்டம்... ஏதோ ஒரு ஆர்வம் (கடவுள் நம்பிக்கை போல). எல்லாவற்றிக்கும் காரணம் பார்த்தால் ஒன்றுமே இல்லை. எனக்கு கிரிகெட் பக்தர்களை பார்த்தால் அப்படிதான் தோன்றும்.....

இப்படிப்பட்ட மூட செயல்கள் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் இருக்கின்றது... நிகழ்வுதான் வேறு வேறு....

உங்களின் ஆதங்கம் புரிகின்றது

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

ஜோதிஜி said...

ரவுண்டு கட்டி உங்களை அடிக்கப் போறாங்க.

Geetha Ravichandran said...

ஜோதிஜி--நீங்களே ரூட் போட்டு கொடுப்பது போல் இருக்கே!!!!
ஞானசேகரன்--நன்றி.நாட்டம் சரி ஆனால் தன்னையே வருத்திக்கொள்ளும் நாட்டம் ,கடவுளுக்கானாலும் சரியல்ல என்பது என் எண்ணம்.

Geetha Ravichandran said...

Subra--களவாணி படத்தின் நாயகன் ஒரு கதாபாத்திரமே. அந்த கதாபாத்திரத்தை பார்த்து நிஜ வாழ்க்கையில் பின்பற்றுபவர்கள்தான் தவறு செய்பவர்கள். வருகைக்கு நன்றி.

LK said...

kandippa rajini ithai virumbuvathillai. avarudaya arivurai, thai thanthayai kaapatrungal avargal sollai thatthadheergal enbathuthan

பிரியமுடன் பிரபு said...

http://priyamudan-prabu.blogspot.com/2008/08/blog-post_06.html

SEE THAT

parvathapriya said...

முதலில் உங்களுடைய 25 பதிவுக்கு எனது வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன்
நல்ல சமுக சிந்தனை உள்ள பதிவு
முதலில் படிக்காத பாமரர்கள் தான் இந்தமாதிரி செய்து கொண்டு இருந்தார்கள் இப்போது ஒரு சில
படித்தவர்களும் இதில் கலந்து கொள்கின்றனர் என்பதும் வருத்தப்பட வைக்கிறது
அருகில் உள்ள நாட்டில் நமது தமிழ் குடி மக்கள் ஒரு வேளை உணவுக்கு வேதனை பட்டால்
நமக்கு என்ன?நமக்கு வேண்டியது ஒரு பொழுது போக்கு என்ற எண்ணம் இருக்கும் வரை
யார் என்ன சொன்னாலும் எழுதினாலும் அரசாங்கம் உட்பட யாரும் கவலை பட போவது இல்லை
என்ன! நீங்கள் பதிவு எழுதி சற்று ஆறுதல் பட்டு கொள்ளலாம் ;நாங்கள் பின்னூட்டம் எழுதி சற்று ஆறுதல் பட்டு கொள்ளலாம்
என்ன! நாம் வேண்டி சொல்லி கொள்வது எல்லாம் தயவு செய்து ரசிகர்களாக மட்டும் இருங்கள் ;தீவிர வெறியர்களாக மாறாதீர்கள் என்று தான் !