குடை வள்ளல்!!
புற்களுக்குத் தானே
குடை பிடித்தாய்
பின் ஏன் நீ
நாய் குடையானாய்?
புல் குடையென்று
ஏன் யாரும் உன்னை
பெயர் சொல்லி
அழைக்கவில்லை?
புற்களுக்குத் தானே
குடை பிடித்தாய்
பின் ஏன் நீ
நாய் குடையானாய்?
புல் குடையென்று
ஏன் யாரும் உன்னை
பெயர் சொல்லி
அழைக்கவில்லை?
நேற்று பெய்த மழையில்
நணைந்த புல்
தன் விரல் விரித்து
பிடித்து வைத்த
நீர் துளிகள்,
இன்று வீசும்
கதிரவனின் ஒளியில்
காயாவண்ணம்
குடை பிடித்தாயோ?
நணைந்த புல்
தன் விரல் விரித்து
பிடித்து வைத்த
நீர் துளிகள்,
இன்று வீசும்
கதிரவனின் ஒளியில்
காயாவண்ணம்
குடை பிடித்தாயோ?
சில இடத்தில் ஒருவனாய்
குடை பிடித்தாய்,
சில இடத்தில்
குழந்தை குட்டி,
சுற்றம் சூழ குடை பிடித்தாய்!
சிரித்த முகம் மாறாமல்
அழகாக குடை பிடித்தாய்!
குடை பிடித்தாய்,
சில இடத்தில்
குழந்தை குட்டி,
சுற்றம் சூழ குடை பிடித்தாய்!
சிரித்த முகம் மாறாமல்
அழகாக குடை பிடித்தாய்!
செங்கதிரில் உன்
உடல் கறுத்து,
தோல் சுருங்கி,
கலையிழந்து
துவண்டு போய்
நீயும் தான்
சாயங்காலம் வரும்முன்னே
உன்னை பெற்ற
தாயின் மடி சேர்ந்துவிட்டாய்!
உடல் கறுத்து,
தோல் சுருங்கி,
கலையிழந்து
துவண்டு போய்
நீயும் தான்
சாயங்காலம் வரும்முன்னே
உன்னை பெற்ற
தாயின் மடி சேர்ந்துவிட்டாய்!
புல் வாழ
குடையாய் நின்று
ஈசல் போல்
ஒர் நாள் வாழ்ந்து
மறித்துப்போன உன்னை
மதியாமல் மண் மீது
கால் பதித்து
கடந்து சென்றார்.
ஆனாலும் சலிக்காமல்
புல்லுக்கு உரமாக
குடைவள்ளல்
ஆகிவிட்டாய்!!!!!
குடையாய் நின்று
ஈசல் போல்
ஒர் நாள் வாழ்ந்து
மறித்துப்போன உன்னை
மதியாமல் மண் மீது
கால் பதித்து
கடந்து சென்றார்.
ஆனாலும் சலிக்காமல்
புல்லுக்கு உரமாக
குடைவள்ளல்
ஆகிவிட்டாய்!!!!!
No comments:
Post a Comment