Wednesday, September 22, 2010

தாய்மை

திறக்காத கண்களை
திறக்க வைத்து
பல் துலக்கி
குளிக்க வைத்து
அவசரமாய் சீருடை மாட்டி
சுட்டு வைத்த இட்லியை
வாயில் திணித்து
முழுங்கி விடு என
ஒருவாய் தண்ணீரும் கொடுத்து
புத்தகப் பையை தோளில் மாட்டிவிட்டு
பள்ளிக்கு கையசைத்து
அனுப்பி விட்டு
மாலை வரை
காத்திருப்பேன் எப்பொழுது
நீ திரும்பி வருவாய் என.


வந்த பின்
கை,கால் கழுவ வைத்து
சாப்பிட டிபனும் கொடுத்து
”எடுத்து வா” புத்தகப் பையை என்பேன்.
பையை எடுத்து வர பத்து நிமிடம்
திறப்பதற்கோ ஐந்து நிமிடம்
பாட புத்தகத்தை எடுப்பதற்கு
மற்றுமொரு ஐந்து நிமிடம்.

வீட்டு பாடம்
செய்ய வைப்பதற்குள்
என் தலைக்குள் பெரும் சூறாவளி.
காற்றின் வேகம்
மின்சாரமாய் உடம்பெங்கும் பாய
கோபத்தில் கைகளோ
உன் உடம்பில்
தடம் பதிக்க
அழுது கொண்டே முடித்திடுவாய்
வீட்டுப் பாடம் அனைத்தையுமே.
தேம்பி தேம்பி
களைத்திடுவாய்
படித்து முடித்தப் பின்
உறங்கிடுவாய்.

புயலுக்குப் பின் அமைதியாக
நீ உறங்கிய பின்
உன் அருகில்
அமைதியாய் வந்து
உன் தலையை
என் மடியில் கிடத்தி
உன் தலை கோதி
நெற்றியில் முத்த மிடுவேன்
கண்களில் நீர் நிரம்பி
கண்ணத்தில் வழிந்தோட
உன்னை வாரி அணைத்து
தூங்கும் உன்னிடம்
காதுகளில்
மெதுவாக ஓதிடுவேன்
“சாரிடா கண்ணா” என்று.
 

8 comments:

Ani said...

beautiful.. loved this post and could easily relate to it as a mom.

On a lighter note by any chance is this about a mom living at India? Over here the kid picks up the fone to dial 911 by the time the mom thinks about raising hand... still the bedtime part is true true true...

priya.r said...

கீதா ...........
இதே தான் தினமும் எனது வீட்டிலும் நடந்து கொண்டு இருக்கிறது
பரிட்சை சமயமா ;எவ்வளோ சொல்லி கொடுத்தாலும் மறந்து விடுவதை பார்க்கும் போது
எரிச்சலாக இருப்பதால் சற்று அடியும் கொடுத்து விடுகிறேன்.,அவன் அதை மறந்து விடுகிறான்
நான் தான் அவஸ்தை படுகிறேன்
நல்ல பகிர்வு கீதா.......

Geetha Ravichandran said...

Ani--tks. for ur support.
Priya--same here. exam time , tension build up. tks . for ur support.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சிலிர்க்க வைத்த எழுத்து... ரெம்ப நல்லா எழுதி இருக்கீங்க கீதா. என் தோழி ப்ரியா மூலமா உங்க லிங்க் கிடைச்சது... தேங்க்ஸ் டு ப்ரியா...

Radhakrishnan said...

கொடுமையான வாழ்க்கை. நல்ல கவிதை.

Geetha Ravichandran said...

Apavi Thangamani-- Tks . Gud to know u r Priya's friend.
V.Radhakrishnana- Thank u .

priya.r said...

கீதா வின் ப்ளோக்குக்கு வருகை தந்ததற்கு முதலில் வாழ்த்துக்கள் புவனா(அப்பாவி தங்க மணி )
கீதா ....புவனா சிறந்த கவிதை ,கட்டுரை ,நோவேலாசிரியை .,அவரின் கவிதை விகடனில் பிரசுரம்
ஆகி உள்ளது .,புவனாவின் சிரிக்க வைக்கும் பல பதிவுகள் மனசோர்வுக்கு மருந்து .,

சென்ற வாரத்தில் என் பையன்களுக்கு பரிட்சை நேரத்தில் உங்கள் கவிதையை படித்து புவனாவிடம் பகிர்ந்து கொண்டேன் ;உங்கள் கவிதை சிறப்பாக இருக்கிறது என்றும் அவரின் வாழ்த்துகளையும் உங்களுக்கு தெரிவிக்க சொன்னார் ;நீங்களே சொல்லி விடுங்க என்றேன் ;உங்கள் லிங்க் வாங்கி கொண்டு இங்கும் வருகை தந்து வாழ்த்தி சென்று உள்ளார்!

இது போல வாழ்வியல் கவிதைகளை உங்களிடம் நிறைய எதிர் பார்க்கிறோம் கீதா

அமுதா கிருஷ்ணா said...

ம்.என்னுடைய பசங்க வளர்ந்துட்டாங்க.ஆனாலும், பழசு நினைவிற்கு வருது..