மூன்று வயதில்
பொம்மை பற்றி பேசினேன்
ஏழு வயதில்
தோழியைப் பற்றி பேசினேன்
பத்து வயதில்
சினிமா பற்றி பேசினேன்
பதிமூன்று வயதில்
காதலை பற்றி
பேச ஆரம்பித்தேன்
இருபது வயதில்
திருமணம் பற்றி பேசினேன்
இருபத்தைந்தில்
குழந்தை பற்றி பேசினேன்
முப்பதில்
அழகைப் பற்றிப் பேசினேன்
நாற்பதில்
கணவனைப் பற்றி பேசினேன்
ஐம்பதில்
மருமகளைப் பற்றி பேசினேன்
அறுபதில்
பேரக்குழந்தைகளைப் பற்றி பேசினேன்
எழுபதில்
சாவைப் பற்றி பேசினேன்
பெண்ணென்றால்
பேசவே பிறந்தது போல்..
6 comments:
ஆஹா..!!
நல்ல கவிதை..!!
அதும் இந்திய பெண்கள் பேசாது இருக்கலாமா?!
கவிதை அருமை,
ஒரு வேளை வெளிநாட்டில் வசிக்கிறீர்களோ.
ஒரு பருவத்தில் கூட சக மனிதர்களை, ஆண்டவனை, இயற்கையை பற்றி பேச விருப்பம் இல்லை போல
NICE
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
உண்மையை ஒத்துக்கொண்டதற்கு நன்றி. பேசிப்பேசியே குட்டிச்சுவராகிற பெண்கள் நிறைந்த உலகம்தானே இது.
இந்த "பற்றி" என்பதற்கு என்ன பொருள்? கணவனைப் பற்றி, அதாவது "அவனுக்கு எதிராக", "அவன் செயல்களுக்கு எதிராக".. இப்படித்தானே.
வெங்கட்--பேசினால் என்ன குட்டிச்சுவராகத்தான் ஆகவேண்டுமா என்ன?? பேசுவதினால் பகிர்தலும் நடக்கின்றது. அது ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்கிறது. பேசாமலேயே கழுத்தறுக்கும் ஆண்கள் நடுவே பெண்கள் பேசித்தான் சாதிக்க முடியும்.”பற்றி” என்றால் ஏன் நெகடிவாக யோசிக்கிறீர்கள்? குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும். கண்முன் நடக்கும் நல்லவைகளை பற்றியும் பேசலாமே!!!!
Post a Comment