Monday, May 6, 2019

குறைகள்

Image may contain: plant and indoor

Imperfections are pretty too! குறைகள் கூட ஓர் அழகு தான். ஆசைகள் துறந்ததாலோ என்னவோ கோணலான புத்தன் கூட அழகாக தெரிகிறான். நான் படைத்ததாலா இப்படி ஒரு நினைப்பு? இதே நினைப்புத்தான் இவ்வுலகை காண்கையில் அந்த கடவுளுக்கும் இருக்குமோ? அதனால் தான் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சோ? புத்தன் வேண்டுமானால் கோணலாகி போகலாம் ஆனால் அவன் புத்தி என்றும் மாறாது......ஏனென்றால் அது அவன் சுயம்..ஆம் அவனுடைய சுயபுத்தி... யார் முயன்றாலும் அது மாறாது....

கற்றது

கற்றது
கை மண் அளவு
என்று நினைத்துக்
கொண்டிருந்தேன்.
இப்பொழுது 
ஒவ்வொரு நொடியும்
உணர்கிறேன்
கற்றது வெறும்
கடுகளவு கூட
இல்லை என்று!
இவ்வுலகில்
நான் என்பது
ஒரு புள்ளி
என்று நினைத்துக்
கொண்டிருந்தேன்
. இப்பொழுது உணர்கிறேன்
நான்
ஒரு புள்ளியின்
ஓர் அணுஅளவு கூட
இல்லை என்று!

மாற்றம்

Image may contain: sky, pool and outdoor


Image may contain: outdoor
நேரத்திற்கும் , காலத்திற்கும் ஏற்ப , 
நிலையான வாழ்வு பெற்ற 
வானமே மாறும் பொழுது, 
”தேடிச் சோறுநிதந் தின்று — பல 
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம் 
வாடித் துன்பமிக உழன்று — பிறர் 
வாடப் பலசெயல்கள் செய்து — நரை 
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல
வேடிக்கை மனிதர்”
சூழ்நிலைக்கேற்ப மாறுவது 

என்ன பெரும் விந்தை??