வினாயகர் சதுர்த்தி இதோ வந்து விட்டது. விழா காலம் தொடங்கி விட்டது. வானம் பொய்த்தாலும் விழாக்கள் பொய்க்காது நம் நாட்டில். டீசல் விலை ஏறினால் என்ன , மின்சாரம் இல்லாவிட்டால் என்ன, இது போன்ற விழாக்கள் தான் நமக்கு வாழ்க்கையின் மேல் ஒரு பற்று வர காரணமாக இருக்கின்றன. நம்முடைய அன்றாட பிரச்சினைகளை தூர வீசிவிட்டு அவரவர் வசதிக்கேற்ப எப்படியோ பண்டிகைகளை கொண்டாடி விடுகிறோம்.கடவுள்களை எப்படியாவது மகிழ்வித்து, குளிர்வித்து நமக்கு சாதமாக நடக்க வைக்க ஒரு முயற்சி. எது எப்படியோ விழாக்கள் என்றால், கூட சாப்பாடும் பெரும் அங்கமாகி விடும்பொழுது கொண்டாட நமக்கு என்ன கஷ்டம் இருக்கப்போகிறது. கரும்பு தின்ன கூலியா?? அதுவும் வினாயகர் சதுர்த்தி என்றால் கொழுக்கட்டை கிடைக்கும். அப்புறம் என்ன திருவிழாதான். தொந்தி வயிற்றனே என்று தொழுதுவிட்டு நம் தொந்தியை நிரப்ப வேண்டியது தானே?? சரி நான் என்னவோ கொளுக்கட்டைக்கு செய்முறை விளக்கம் கொடுக்கப் போகிறேன் என்று எண்ண வேண்டாம். கொழுக்கட்டை விஷயத்தில் நானும் ஒரு கத்துக்குட்டி தான். பிடிச்சா கொழுக்கட்டை கும்பிட்டா பிள்ளையார் எப்படி என் லாஜிக்?
விநாயகர் தான் என் இஷ்ட கடவுள். என்னை மாதிரியே??? ஒரு சாந்தமான கடவுள் என்பதால் எனக்கு அவரை ரொம்பவே பிடிக்கும். போன வருடம் இதே நாளில் தான் நாங்கள் இந்த வீட்டிற்கு குடிவந்தோம். ஒரு வருடம் போனதே தெரியவில்லை. புது வீட்டிற்கு வந்ததால் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. போன வருடம் எங்கள் வீட்டு விநாயகர் பாயசம் மட்டுமே சாப்பிட்டார். இந்த வருடம் விநாயகர் சிலை வாங்கி , கொழுக்கட்டை செய்து, சுண்டல் செய்து சாமி கும்பிட முடிவு செய்து இருக்கிறேன். ஒரு வாரமாகவே தெருக்கள் தோறும் வினாயகர் சிலைகள் விற்கப்படுகின்றன. வித விதமான விநாயகர் பொம்மைகள். பெயிண்ட் அடித்தது, பெயிண்ட் அடிக்காதது , களி மண்ணில் செய்தது, ப்ளாஸ்டராப் பாரிஸில் செய்தது , செம்மண்ணில் செய்தது என்று பல வகைகள். அதிலும் ஆர்கானிக் பெயிண்ட் அடிக்கப்பட்டவை, சாதாரண ரசாயண வண்ணம் பூசப்பட்டவை என்று வேறு தினுசுகள். பல வர்ணங்கள், பல சைசுகள், பல அவதாரங்கள் என்று கொட்டி குவித்து இருக்கிறார்கள். பார்க்கையில் இவை அத்துனையும் விலை போகுமா என்று எண்ணத் தோன்றுகிறது. கண் கூசும் அளவிற்கு வர்ணம் பூசப்பட்டிருக்கிறது. சாலை ஓரத்து நடைபாதை கடைகள் காளான் போல முளைத்து விட்டன. இந்த ஒரு வாரத்தில், காற்று உள்ள போதே தூற்றிக்கொள் என்று அவர்கள் நினைத்த விலையை வைத்து விற்கிறார்கள். மக்களும் வேறு வழியின்றி வாங்கி செல்கிறார்கள். வினாயகர் இத்துனை அவதாரங்களில் தோன்றி இருக்கிறார் என்பதே இந்த ஒரு வாரத்தில் நான் பார்த்த சிலைகள் மூலமாகத் தான் அறிந்து கொண்டேன்.
சிலைகள் மட்டுமா விற்கிறார்கள், அதனை அலங்கரிக்க தோரணங்கள், வாழைமரங்கள், எருக்கம் பூ மாலைகள்,கதம்ப மாலைகள், மல்லிகை, ரோசாப்பூ, சம்மங்கி என்று பல விதமான பூக்கள், ஆடை அணிகலன்கள், என்று பல வித பொருட்கள். விநாயகர் யானை முக கடவுள் இல்லையா அதனால் விற்கப்படும் பொருட்கள் யாவும் யானை விலை.விநாயகருக்கு வெயில் அடிக்காமல் இருக்க குடை வேறு அதில் அத்துனை வகைகள்.முன்பெல்லாம் வீட்டில் அரிசியை ஊரவைத்து, காயவைத்து, இடித்து மாவு செய்து கொளுக்கட்டை செய்வார்கள். இப்பொழுது இந்த அவசர உலகில் அதுவும் ரெடிமேடாக கிடைக்கிறது. கொளுக்கட்டையே ரெடிமேடாக கிடைக்கும் பொழுது மாவு கிடைக்காதா என்ன. A2B அதுதாங்க அடையார் ஆனந்த பவன் இருக்க பயமேன். எந்த விதமான கொளுக்கட்டை வேண்டுமானாலும் வாங்கி சென்று சாமிக்கு வைத்து நெய்வேத்தியம் செய்தால் வேலை சுலபமாக முடிந்து விடுகிறது.நோகாமல் நொங்கு எடுக்க சொல்லியா கொடுக்கவேண்டும். சாமி என்ன “இது ரெடிமேடா அல்லது வீட்டில் செய்ததா என்றா கேட்கப்போகிறார். சாமி பெயரை சொல்லி நம் வயிற்றில் தான் போகப்போகிறது.
நாம் வீட்டில் கஷ்டப்பட்டு கொளுக்கட்டை பிடித்து அது கடைசியில் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாவதற்கு இதுவே மேல் இல்லையா? ஆனாலும், எனக்கு என் கைகளால் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கவே பிடிக்கும். குரங்கானாலும் நான் செய்த குரங்காக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணம். எப்படியோ என் பெண் சாப்பிட போவது என்னவோ மேல் இருக்கும் அந்த வெள்ளை பகுதியை தான். என் பையனோ, “ அம்மா why dont you keep donuts for Ganesh and pray? என்று கேட்கும் ஜாதி. நம் பழக்க வழக்கங்களை , கலாசாரத்தை அவர்களுக்கு எப்படியாவது தினித்து விடவேண்டும் என்ற என் அடங்காத ஆசைதான் இப்படி எல்லா விழாக்களையும் நான் கொண்டாடுவதன் நோக்கம். பிற்காலத்தில் அவர்கள் செய்வார்களா இல்லையா என்பது மில்லியன் டாலர் கேள்வி... தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்பது என் நம்பிக்கை. ஆனால் அவர்கள் என்னமோ நான் வேலை வெட்டி இல்லாமல் இப்படி யெல்லாம் செய்கிறேன் என்றுதான் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
முன்பு அவரவர் வீடுகளில் வைத்து தான் சாமி கும்மிட்டார்கள் இப்பொழுது கோவிலும் இல்லாமல், வீடும் இல்லாமல் விமர்சையாக கொண்டாடுகிறோம் என்ற பெயரில் வீதிக்கே சாமியை கொண்டு வந்து விட்டார்கள். பணம் வசூல் செய்து, வெடி என்ன , வாண வேடிக்கை என்ன, ஆட்டம் என்ன, பாட்டம் என்ன என்று ஊரே அல்லோல படுகிறது. கணபதி ஒரு அமைதியான , பொறுமையான தெய்வம் அவருக்கு இந்த ஆரவாரம் தேவையா என்று தோன்றச் செய்கிறது. தெரு முனைகளில் மேடை அமைத்து பெரிய பெரிய விநாயகர் சிலைகள் வைத்து பூசைகள் செய்யப்படுகிறது. ரேடியோ செட் அமைத்து பாட்டுக்கள் தூள் பறக்கிறது. அடுத்தவருக்கு தொந்தரவாக இருக்குமே என்ற எண்ணம் சிறிது கூட கிடையாது. பாட்டுச் சத்தம் காதுககளை கிழிக்கும். தெருக்களில் போகும் வாகணங்கள், மனிதர்கள் என்று அனைவருக்கும் கஷ்டம். இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நம் தொந்தி தேவன் நடுநாயகமாக அமைதியாக வீற்றிருப்பார்--- யான் அறியேன் பராபரமே என்று ! அவர் என்ன செய்வார் --பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம் ....
சரி இப்படியெல்லாம் ஊரார் மெச்ச ஒரு வாரகாலம் கொண்டாடி முடித்துவிட்டு பின் அந்த சிலைகளை என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். அம்மை அப்பனே உலகம் என்று நினைத்த கடவுளை வண்ண விளக்குகளால் அலங்காரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகளில், மேள தாளத்துடன் ஊரெங்கும் ஊர்வலமாக எடுத்து செல்கிறார்கள். அப்படி எடுத்து செல்லும் பொழுது அவர்களுக்குள்ளோ அல்லது வேற்று மதத்தினருடனோ சண்டை சச்சரவுகள் வராதிருக்க போலீஸ் பாதுகாப்பு வேறு. அப்படி எதாவது சண்டை வந்து கலேபரமாகி போனால் சாமி சிலைகளை அங்கேயே இருந்த இடத்தில் விட்டு விட்டு துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடுபவர்களும் உண்டு.இப்படி பட்ட சூழ்நிலைகள் மத கலவரத்திற்கு வித்து விளைவிக்கின்றன. சாமிக்கே போலீஸ் பாதுகாப்பு தேவை படுகிறது இந்த ஜனநாயக நாட்டில். என்ன கொடுமை சரவணனின் அண்ணா இது!!! இப்படியாக பலத்த பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படும் சிலைகள் அந்த அந்த ஊரில் உள்ள நீர் நிலைகளில் கரைப்பது நடைமுறை. கடல் இருக்கும் ஊர் என்றால் பிரச்சிணை ஒன்றும் இல்லை .எப்படி பட்ட சிலையையும் கரைத்துவிட்டு வந்து விடலாம். ஆனால் கடல் இல்லாத ஊர்களில் ஆற்றில், குளத்தில் என்று குடிநீருக்கு ஆதாரமாக இருக்கும் இடங்களில் கரைக்கப்படுகிறது. களிமண் பிள்ளையார் என்றால் பரவாயில்லை ஆனால் ரசாயண சாயம் பூசப்பட்ட சிலைகளை , பிளாஸ்டராப் பாரிஸ் போன்றவற்றால் செய்த சிலைகளை இந்த இடங்களில் கரைப்பதன் மூலம் அந்த குடிநீரே மாசுபடுகிறது. மேலும் பூக்கள், தோரணங்கள் என்று அத்துணை பொருட்களும் அந்த நீர் நிலைகளிலேயே வீசப்படுகிறது. இவற்றில் மக்கும் பொருட்களும், மக்காத பிளாஸ்டிக், தெர்மா கோல் போன்றவையும் அடங்கும். நமக்கு வாழ்வாதாரமாக இருக்கும் நீர்நிலைகளை நாமே அழித்து பாழ்படுத்துவது பால் தரும் பசுவின் மடியை துண்டிப்பதை போன்றது.
இதை விட கொடுமை என்ன வென்றால், சில இடங்களில், எப்படியோ தண்ணீரில் சிலையை கரைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அது எந்த மாதிரி தண்ணீர் என்று கவணிக்காது கொண்டு போய் சிலைகளை போட்டு விட்டு வந்து விடுகிறார்கள். பல இடங்களில் கழிவுநீர் சென்று அடையும் நீர் நிலைகளில் கலந்து விடுகிறார்கள். ஒரு வாரமாக போற்றி கொண்டாடிவிட்டு கடைசியில் இப்படி செய்வது புண்ணியம் என்று எந்த சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது.சாமியே ஆனாலும் விருந்தும் மருந்தும் நாலு நாள் தான் போலும் !! இப்படி அநாகரிகமாக நடந்து கொள்பவர்களை பார்க்கையில் எத்துனை பாரதி பிறந்தாலும் இவர்களை திறுத்த முடியாது என்று கோபம் வருகிறது. மதசார்பான விஷயங்களில் எவன் ஒருவன் மாற்றுக்கருத்து கூறுகிறானோ அவன் பயித்தியகாரனாகவே பார்க்கப்படுகிறான். சாமி சிலையில் ரத்தம் வடிகிறது, பிள்ளையார் பால் குடித்தார் என்பதை நம்புவதற்கு தான் இவர்கள் தயாராய் இருக்கிறார்கள். ஆனாலும் எனக்கு தோன்றிய ஒரு யோசனையை நான் இங்கே பகிர்ந்து கொள்ளவே ஆசை படுகிறேன். என்னை போன்று ஒரு பத்து பேர் மாறினாலும் அது நன்மைக்கே!!
இப்படி பார்க்கும் நீர் நிலைகளில் எல்லாம் சிலைகளை கரைப்பதற்கு பதில் இப்படி செய்தால் என்ன? எல்லாவற்றிலும் recycle, and reuse என்று சொல்லும் நாம் ஏன் இதிலும் அதனை பின்பற்றக்கூடாது?? வருடா வருடம் புதிதாக சிலை வாங்குவதற்கு பதில் ஒரு பிள்ளையார் சிலையையே வருடாவருடம் வைத்து ஏன் பூசை செய்யக்கூடாது. ஒரு சிலைக்கு திரும்ப திரும்ப பூசை செய்வதால் அதன் சக்தியும் பெருகும் அல்லவா?? நான் சிறுமியாக இருந்த பொழுது பச்சை களிமண்ணில் செய்த வர்ணம் பூசாத பிள்ளையார் சிலை வாங்கி வந்து அதற்கு குண்டுமணி விதைகளை கண்களாக வைத்து, எருக்கம் பூ மாலை அணிவித்து, வீட்டில் இருக்கும் ஒரு வெள்ளை துண்டினை கட்டி, மணிகள் அணிவித்து அலங்கரித்து வழிபடுவது வழக்கம். பின் மூன்றாம் நாள் அதனை ஆற்றில் கரைத்து விடுவோம். அப்பொழுது தண்ணீருக்கா பஞ்சம்!! ஓடும் தண்ணீரில் கரைத்துவிடுவதால் அது கரைந்து விடும். பாரதி சொன்ன “பார்க்கும் இடமெல்லாம் நந்தலாலா” என்பது போய் இப்பொழுதுதான் பார்க்கும் இடமெல்லாம் அடுக்கு மாடி குடியிருப்புகளாக ஆகிவிட்டதே!! வீட்டிற்கு ஒரு பிள்ளையார் என்றால் கூட நினைத்து பாருங்கள் எத்துனை பிள்ளையார் சிலைகள். எங்கே இருக்கிறது தண்ணீர் இவற்றை கரைப்பதற்கு. இல்லை இல்லை நாங்கள் வருடாவருடம் பிள்ளையார் வாங்கி தான் கொண்டாடுவோம் என்று கூறுபவர்களுக்கு ஒரு மாற்று யோசனை... இப்படி பொது நீர்நிலைகளில் அது எப்படி பட்ட தண்ணீர் என்று கூட தெரியாமல் அதில் கரைப்பதற்கு பதில் வீட்டிலேயே ஒரு பக்கெட் தண்ணீரில் கரைத்து அவரவரின் தொட்டதிலேயே அதனை கொட்டி விடலாம் இல்லையா??
பெங்களூரில் சிலைகளை கரைப்பதற்கென்றே பெரிய பெரிய தொட்டிகளை அரசாங்கம் குறிப்பிட்ட இடங்களில் வைத்துள்ளது. மாலைகள், தோரணங்கள் போன்றவற்றை போட தனியாக குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டிருகின்றன.நாளேடுகளில் இதற்கான அறிவிப்புகளும் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் பொறுத்து இருந்து பார்க்க வேண்டும் இவையெல்லாம் ஒழுங்காக உபயோகப்படுத்தப்படுகிறதா அல்லது செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்குமா என்று இன்னும் சில தினங்களில் தெரிய வரும். இப்படி பட்ட சிறு சிறு விஷயங்களில் நாம் நம் பொறுப்புணர்ச்சியை காட்டி அரசாங்கத்துடன் ஒத்துழைத்தால் நன்மை அடையப்போகிறது நாம் தான். நான் முடிவு செய்து விட்டேன் இந்த வருடம் வாங்கும் பிள்ளையார் recycle and reuseதான். சரி சரி ஊருக்கு செய்த உபதேசம் போதும் என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது, நான் போய் கொழுக்கட்டைக்கு வேண்டியவற்றை தயார் செய்கிறேன். நீங்களும் போய் ஆக வேண்டிய வேலையை பாருங்கள்.... கணபதி பாபா மோரியா..................................
Tuesday, September 18, 2012
Wednesday, June 27, 2012
இடியாப்பச் சிக்கல்
என்னடா இவள் ரொம்ப நாள் இடவெளிக்குப் பின் ஒரு சிக்கலுடன் வருகிறாளே என்று பார்க்கிறீர்களா? இது ஒன்றும் அப்படி ஒரு பெரிய குடும்ப சிக்கலோ அல்லது அரசியல் சிக்கலோ இல்லை. நேற்று இரவு நான் இடியாப்பம் செய்த கதை தான் இது. வழக்கம் போல் இரவு உணவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தலையை பிய்த்துக்கொண்டு இருந்தேன். இட்லியோ அல்லது தோசையோ ஊற்றலாம் என்றால் வீட்டில் மாவும் இல்லை. மாவு இல்லாதது எனக்கு கை உடைந்ததை போன்று இருந்தது. கடையில் சென்று ரெடிமேட் மாவு வாங்கலாம் என்றால் அதற்கும் அலுப்பு. உடை மாற்றி செல்ல வேண்டுமே.. அதற்கு வீட்டில் இருக்கும் எதையாவது வைத்து சமாளிக்கலாம் என்று முடிவு செய்தேன். இரவில் சாதம் என்றால் என் வீட்டில் இருப்பவர்கள் காத தூரம் ஓடி விடுவார்கள். உப்புமா என்றால் பிடிக்காது, சப்பாத்தி மதிய உணவிற்கு கொடுத்தாகிவிட்டது. ராகி தோசை ஊற்றலாம் என்றால் அதுவும் இறங்காது. சரி என்று வீட்டில் பதுங்கு குழி போல் இருக்கும் ஸ்டோர் ரூமிர்குள் நோட்டம் விட்டேன்.
எனக்கே தெரியாமல் பல பல மளிகை சாமான்கள் அதற்குள் ஒளிந்து கொண்டு இருந்தது. இருப்பது தெரியாமலேயே பல சாமான்களை மேலும் மேலும் வாங்கி வைத்துள்ளேன். தோண்ட தோண்ட புதையல் போல பல சாமான்கள் வெளியே வந்த மயமாக இருந்தது. சில நேரங்களில் தேடி பார்க்க அலுப்படைந்து கடைக்குச் சென்றுவாங்கி வந்த சாமான்கள், ஒரு சாமான் வாங்க போய் எப்படியும் கடைக்கு வந்தாகி விட்டது , ஒரே அடியாக இன்னும் கொஞ்சம் சாமான்களையும் வாங்கி விடலாம் என்று வாங்கிய சாமான்கள், புதிதாக செய்து பார்க்கலாம் என்று சோதனைக்காக வாங்கி வந்த சாமான்கள், (என் சமையல் அறையே எனக்கு ஒரு சோதனைக்கூடம் தான். என் எலிகள் யார் என்பதை நான் சொல்லித்தெரிய வேண்டிய அவசியமில்லை. ) என்று ஒரு மினி மளிகை கடையே உள்ளே இருந்தது. தோண்ட தோண்ட பல கண்ணில படாத சாமான்கள் கைக்கு கிடைத்தது. அதில், எக்ஸ்பயரி தேதி முடிந்த சாமான்கள், பூச்சி பிடித்த சாமான்களும் அடக்கம். வந்தது வந்தாகிவிட்டது அப்படியே சுத்தமும் செய்து விடுவோம் என்று நினைத்து கைக்கு எட்டிய தேவை படாத சாமான்களையும், வீனாகிவிட்ட சாமான்களையும் தூக்கி எறிந்தேன். முழு அறையும் சுத்தம் செய்வது என்றால் எனக்கு ஒரு நாள் தேவைப்படும். அதற்கு இப்பொழுது நேரம் இல்லை. மணி எட்டு அடித்தால் என் பிள்ளைகளுக்கு வயிற்றில் மணி அடித்து விடும். அதற்குள் நான் ஏதாவது செய்தாக வேண்டும். எப்படியோ தேடிப்பார்த்ததில் டபுள் ஹார்ஸ் (இரட்டை குதிரை) ஒரு இடியாப்ப மாவு பாக்கெட் கைக்கு கிட்டியது. சரி இடியாப்பம், கடலக்கறி செய்து விடலாம் என்று முடிவு செய்து அதை வெளியில் எடுத்து வந்தேன்.
இது வரையில் அம்மா வீட்டில் அரைத்து கொடுத்த மாவில் தான் இடியாப்பம் செய்து இருக்கிறேன். முதன் முறையாக ரெடிமேட் மாவு என்பதால் அதில் எழுதியிருந்த செய்முறை படி செய்ய ஆரம்பித்தேன். கெமிஸ்ட்ரி லேப் போன்று இருந்தது. நன்றாக தண்ணீரை கொதிக்க வைத்து உப்பு கலந்து மாவில் ஊற்றி கிண்டினேன். இது வரையில் நன்றாகத்தான் போனது.. இதற்கு பின் தான் சனி பிடித்தது . என்னிடம் இருந்த இடியாப்பம் பிழியும் கட்டை உடைந்து விட்டதால் என் அம்மாவின் இரும்பு கட்டையை வாங்கி வந்திருந்தேன். அதில் கிண்டிய மாவை உள்ளே வைத்து பிழியத்துவங்கினேன். கீழ் பக்கமாக இடியாப்பமாக விழவேண்டிய மாவு கட்டையின் மேல் பக்கமாக பிதுங்கி வழிந்தது. கட்டையை எவ்வளவு அழுத்தி பிழிந்தாலும் மாவு மேல் பக்கமாகவே வெளியே வந்தது. அடுப்பில் வேறு இதை வேக வைக்க தண்ணீர் கொதித்துக்கொண்டு இருந்தது. எனக்கா கோவம் கோவமாக வந்தது. எப்படியோ முக்கி முனகி இரு கட்டைகளை பிழிந்து வேகவைத்தேன்.
சரி , ஒரு வேளை நாம் மாவை ரொம்ப கெட்டியாக கிண்டி விட்டோமோ என்று சந்தேகப்பட்டு இன்னும் கொஞ்சம் வெந்நீர் ஊற்றி கிண்டினேன். பின் அந்த மாவை கட்டைக்குள் வைத்து பிழியத் துவங்கினேன். முன்னைவிட இப்பொழுது மோசமானது என் நிலைமை. மாவு கட்டையை விட்டு வெளியே வர முற்றிலுமாக மறுத்துவிட்டது. மோட்டார் பைக் ஸ்டார்ட் செய்வதை போன்று கட்டை மேல் ஏறி நின்று மிதிக்காதது தான் பாக்கி. எனக்கு வேறு லொடுக்கு பாண்டி கைகள். அழுத்தி பிழிய முடியாது. ஆஹா சரியாக மாட்டிக் கொண்டுவிட்டோமே என்று நொந்து நூடில்ஸ் ஆக நின்று கொண்டிருந்தேன். நான் படும் வேதனையை என் மகள் பார்த்துவிட்டு “அம்மா நான் கொஞ்சம் ட்ரை பண்றேன்” என்று ஆபத்பாண்டவன் போல் வந்தாள். வந்து அமுக்கி பார்த்தவள் வந்த வேகத்திலேயே ஓடிவிட்டாள். “அம்மா why do you want to trouble yourself like this? why dont you just make chapathi or give us some sandwich?" என்று இன்றைய தலைமுறைக்கே உரிய வேகத்துடன் கூறினாள். மீண்டும் என் பல பரீட்சையை நான் துவங்கினேன். என் மகன் சமையல் அறை பக்கமே வரவில்லை. எதற்கு அங்கு போகவேண்டும், போனால் அம்மா “ரிஷி இதை கொஞ்சம் ட்ரை பண்ணூ என்பாள், வம்பை எதற்கு விலைகொடுத்து வாங்க வேண்டும் , எப்படியும் நமக்கு பிடித்த சாப்பாடு இல்லை என்று அவன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை.
ஒரு கட்டத்தில், பேசாமல் இடியாப்பமாக பிழிவதற்கு பதில் கொழுக்கட்டையாக பிடித்து வைத்து விடலாமா என்று தோன்றியது. எப்படியும் மென்று முழுங்கும் பொழுது மாவாகத்தானே உள்ளே செல்லப்போகிறது. ஆனால் என் வீராப்பு என்னை விடவில்லை. நானா அல்லது மாவா இந்த போட்டியில் ஜெயிப்பது என்று நிணைத்து அழுத்தி பிழிந்தேன். அழுத்திய அழுத்தில் என் வயிற்றுக்குள் இருந்த சிறு குடல், பெருகுடல் எல்லாம் இடம் மாறி ஒரு இரண்டு இன்ச் கீழே இறங்கிவிட்டது போன்று எனக்கு தோன்றியது. எப்படியோ படாத பாடு பட்டு ஒரு வழியாக மாவையும் வீனாக்காமல் இடியாப்பமாக பிழிந்து எடுத்தேன். நூல் போன்று இல்லை என்றாலும் கொஞ்சம் தடியாக இடியாப்பம் இருந்தது. “எடுத்த சபதம் முடித்தேன் ”என்ற ரஜினி பாட்டு தலைக்குள் ரீங்காரிக்க எனக்கு ஒரே பெறுமிதம்.
அடுப்பு மேடையை பார்த்தால் என்னவோ ஒரு இருபது பேருக்கு சமைத்ததை போன்று ஒரே மாவு. பாத்திரத்தில் எல்லாம் மாவு, என் கைகள், மேடை, பாத்திரம் கழுவும் இடம் என்று ஒரு இடம் பாக்கி இல்லாமல் ஒரே மாவு. மறு நாள் வேலையாள் வரும்வரை நான் போட்டு வைக்க முடியாது . எல்லாம் காய்ந்து போய் விடும், என்று கையோடு கையாக எல்லா வற்றையும் சுத்தம் செய்து முடித்தேன். கடலக் கறியும் செய்து சாப்பாட்டு மேசை மேல் எல்லாவற்றையும் வைத்து மூடிவிட்டு சிறிது நேரம் அப்படியே சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து விட்டேன். தோள் பட்டை இரண்டும் ஏதோ ஒரு பத்து பத்து கிலோவை சுமப்பது போல் வலி. விரல்கள் எல்லாம் ஒரே வலி. நீட்டி மடக்க முடியவில்லை. கழுத்து கேட்கவே வேண்டாம். சுளுக்கி கொண்டது போன்று வலி. இப்படி பிள்ளையார் பிடிக்க போய் குரங்கான கதையாகி விட்டது. வாழ்க்கையில் இனி இடியாப்பமே செய்ய கூடாது என்று எனக்குள் சபதம் எடுத்தேன். இடியாப்பம் சரியாக வராததற்கு மாவு காரணமா அல்லது எனக்கு செய்யதெரியவில்லையா என்று எனக்கு விளங்கவில்லை. ஆடத்தெரியாத நாட்டியகாரி மேடை கோணல் என்றாளாம். எப்படியோ இரவு உணவு ரெடியாகிவிட்டது.
மணி எட்டு அடித்தது. என் மகளும், மகனும் சாப்பிட அமர்ந்தார்கள். தட்டில் இடியாப்பத்தை வைத்து கடலைக்கறியை ஊற்றினேன். என் மகள், “அம்மா, will this taste good?” என்று கேட்டபடியே சந்தேகத்துடன் வாயில் எடுத்து வைத்தாள். அவள் கேட்ட கேள்வியை கேட்ட என் மகன் முகம் சுளித்த படியே இடியாப்பத்தை வாயில் எடுத்து வைத்தான். ம்ம்ம்ம்ம் என்ற படி என் மகள் சாப்பிட ஆரம்பித்தாள். பின் சாப்பிட்டு முடித்தப்பின் “ அம்மா, it tasted really good. I never expected it to be so tasty. had a good dinner mama." என்றாள். எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்த என் மகன் “ mama can I have some more of the gravy? என்றான். என் கை வலி, கழுத்து வலி, தொள் பட்டை வலி எல்லாம் பறந்து போனது மனது சந்தோஷத்தில் மிதந்தது. சாப்பிடுபவர்கள் சாப்பாடு நன்றாக உள்ளது என்று சொல்வதை கேட்கும் பொழுது சமைத்த பயனை அடைந்து விட்ட மகிழ்ச்கி. அதுவும் என் மகள் நன்றாக இருக்கிறது என்று கூறிவிட்டால் அது எனக்கு வஷிஷ்டர் வாயில் ப்ரம்ம ரிஷி பட்டம் கிடைத்ததை போன்றது. நீங்கள் உடனே சரி என் மகள் பெரிய சமையலில் கை தேர்ந்தவள் என்று என்னவேண்டாம். அவள் ருசி பார்ப்பதில் கெட்டிக்காரி. ருசித்து உண்ட என் பிள்ளைகளுக்காகவே கண்டிப்பாக என் இடியாப்பச் சிக்கல் தொடரும். இது தான் தாய்மையோ??
பி.கு ::: மணி ஒன்பது. அலுவலகத்தில் இருந்து வந்த என் கணவர் கை கால் முகம் கழுவி விட்டு சாப்பிட வந்தார். வழக்கம் போல் டிவி முன் அமர்ந்து கொண்டு,” என்ன டின்னர்?” என்றார். இடியாப்பம், கடலக்கறி என்றேன். “எனக்குத்தான் ஆப்பம் என்று முடியும் எதுவும் பிடிக்காது இல்லையா, ஆப்பம்,இடியாப்பம், ஊத்தப்பம் எல்லாம்” என்றார். பின் ஒரு வாய் எடுத்து சாப்பிட்டு விட்டு அமைதியாக சாப்பிட்டு முடித்தார். பிடித்து சாப்பிட்டாரா, அல்லது, டிவியில் லயித்த படியே சாப்பிட்டாரா, அல்லது அவருக்கு பிடித்த கடலை குழம்பு என்பதால் சாப்பிட்டாரா, அல்லது எப்படியும் இது தான் இன்றைக்கு உணவு வேறு வழியில்லை என்ற உண்மை உணர்ந்து சாப்பிடாரா யான் அறியேன் பராபரமே?? எதற்கு அந்த ஆராய்ச்சி என்று நான் மீதமிருந்த கொஞ்சம் இடியாப்பத்தை கொட்ட மனமில்லாமல் ஒரு கிண்ணத்தில் போட்டு பிரிட்ஜில் வைத்தேன். மறு நாள் அதில் கொஞ்சம் போல் தேங்காய் துருவி போட்டு, சர்க்கரை ஏலக்காய் போட்டு நான் காலை உணவிற்கு சாப்பிட்டுவிடுவேன். அதை பிழிய நான் பட்ட கஷ்டம் கொஞ்மா நஞ்சமா???

Friday, November 25, 2011
இப்போ என்ன செய்வேன்??
அன்று என் மகனுக்கு மட்டும் பள்ளி விடுமுறை. மகள் பள்ளிக்குச் சென்று விட்டாள். வழக்கமாக பள்ளி இருக்கும் நாட்களில் அவனை நான் தண்ணீர் ஊற்றி எழுப்பாதது தான் பாக்கி. தொண்டை வறண்டு போகும் வரை “ரிஷி எழுந்திரி, ரிஷி எழுந்திரி, ஸ்கூலுக்கு டைம் ஆயிடுச்சு, லேட் ஆகுது” என்று தேய்ந்த ரெக்கார்டாய் கத்திக்கொண்டே இருப்பேன். அது என்னவோ செவிடன் காதில் சங்கு ஊதிய கதை தான் தினமும். இரவு சீக்கிரமாக தூங்கச் சொன்னால் அது ஒரு குற்றச்செயல் போன்று அவனுக்குத் தோன்றும். அவன் தூங்கி விட்டால் அவனுக்குத் தெரியாமல் இந்த உலகில் பல விஷயங்கள் நடந்தேறி விடுமோ என்ற அச்சம் போலும். சீக்கிரம் தூங்கினால் தானே சீக்கிரமாக எழ முடியும்? படுக்கச் சொன்னால் அப்பொழுது தான் அவன் தன் விளையாட்டுப் பொருக்களை பல நாட்கள் காணாதது போல் எடுத்து வைத்து விளையாட ஆரம்பிப்பான். பின் அவற்றை நான் தான் பொறுக்கி வைக்க வேண்டும். ஒவ்வொரு நாள் இரவும் தான் எனக்கு, இனி எந்தப் பொருளும் புதிதாக வாங்கிக் கொடுக்கக் கூடாது என்று தோன்றும். ஆனால் அந்த முடிவு குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு கதை தான். ஒரு வழியாக விளக்குகளை அணைத்துவிட்டு தூங்க வைப்பதற்குள் எனக்கு தூக்கம் வந்து விடும். தினமும் காலையில் என் “எழுந்திரி ரிஷி சுப்ரபாதம்” ஒலித்துக்கொண்டே தான் இருக்கும் ஆனாலும் அவன் தன் இஷ்டம் போல தான் எழுவான், கிளம்புவான். பஸ் வந்துவிடும் என்று நான் தான் அடித்துக்கொள்வேன். அவன் தன் பாட்டிற்கு ஆடி அசைந்து கிளம்புவான். இது தினமும் அரங்கேறும் காட்சி ஆதாலால் நான் எவ்வளவு கத்தினாலும் அவன் , (சொல்லக்கூடாது தான் ஆனால் என்ன செய்வது ? கோழி மிதித்தா குஞ்சு நொடமாகும்?) எருமை மாட்டில் மழை பெய்தது போல் தன் போக்கிற்கு போவான்.
பள்ளி நாட்களில் தான் இப்படி சீக்கிரமாக எழுந்து விட வேண்டியதாகி விடுகிறதே, விடுமுறை நாட்களில் நன்றாக தூங்கட்டும் என்று நான் நினைத்துக்கொண்டு எழுப்பாமல் விட்டுவிடுவேன். ஆனால் விடுமுறை நாட்களில் நான் எழுப்பாமலேயே சங்கு ஊதியது போல் ”ட்டான் ” என்று அவனாக எழுந்து விடுவான். அன்றும் அப்படித்தான். காலை 7.30க்கே எழுந்து உட்கார்ந்து கொண்டான். ஆஹா இன்று நாமும் கொஞ்சம் நேரம் தூங்கலாம் என்ற என் கனவிற்கு முற்று புள்ளி வைத்துவிட்டான். எழுந்த உடனேயே “அம்மா நான் என்ன செய்வேன்?” என்று கேட்டான். என்னுடையதும் வழக்கமான பதில் தான்.” போய் முதலில் பல் தேய்த்து விட்டு வா, காம்ளான் தருகிறேன் குடித்து விட்டு ஹோம் வொர்க் இருந்தால் எடுத்து செய் “ என்றேன். “இல்லை எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் படுக்க வேண்டும் போல் உள்ளது”, என்றான். நான் மட்டும் அந்த ஹோம் வொர்க் என்ற வார்த்தையை உபயோகிக்காமல் இருந்திருந்தால் அவன் எழுந்திருத்திருப்பான். ஹோம்வொர்க் என்ற வார்த்தையை கேட்ட உடன் ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்ததை போல் உணர்ந்து மீண்டும் ஒரு அரை மணி நேரம் படுக்கையிலேயே உருண்டு பிரண்டு கொண்டிருந்தான். என் கணவர் அதட்டியதை கேட்டு பின் எழுந்து விட்டான். எப்படியோ என்னை தூங்காமல் செய்து விட்டான்.
பல் துலக்கி, பால் அருந்தியப்பின் டிவி ரிமோட்டை எடுத்து ஆன் செய்து சோபாவில் செட்டில் ஆகிவிட்டான். ”சரி ஒரு அரை மணி நேரம் டிவி பார்த்து விட்டு அடுத்து படி என்றேன். சரி , இல்லை என்ற எந்த பதிலும் எனக்கு கிடைக்கவில்லை. இது ஒன்றும் எனக்கு புதிதல்ல. என் கணவரும் இதையே தான் செய்வார். சில நேரம் டிவி பார்க்கும் பொழுது வாயில் குச்சியை விட்டு பதிலை பிடுங்க வேண்டும் போல் தோன்றும். தந்தை எவ்வழியோ மகனும் அவ்வழி. அடுப்படியில் எனக்கு வேளை இருந்ததால் நானும் நேரத்தை கவனிக்க தவறி விட்டேன். ஒரு மணி நேரம் டிவி பார்த்து விட்டு பின் நான் காலை சிற்றுண்டி சாப்பிட அழைத்தமையால் மனமே இல்லாமல் டிவியை அணைத்து விட்டு சாப்பிட அமர்ந்தான். அது ஏனோ தெரியவில்லை, டிவியை போடும் பொழுது ரிமோர்ட் கண்ட்ரோல் உடனே கைக்கு கிடைத்து விடும் ஆனால் அதனை off செய்யச் சொல்லும் பொழுது மட்டும் ஒரு நாளும் உடனே கைக்கு கிடைக்காது. அதை தேடுவதை போல் ஒரு பத்து நிமிடம் பாவ்லா நடக்கும். என் குரல் உச்சசுருதியை அடையாமல் எந்த வேளையும் நடக்காது. அரை மணிக்கு மேல் ஆகியும் தட்டில் வைத்திருந்த இரண்டு தோசையும் அப்படியே இருந்தது. சாப்பிடு, சாப்பிடு என்று பின் பாட்டு பாடிக்கொண்டே இருந்தேன். ஒரு மணி நேரம் அதில் கடந்தது. ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தான். “அம்மா இப்போ நான் என்ன செய்வேன்? என்று ஆரம்பித்தான். ” கொஞ்சம் நேரம் படிடா” என்றேன். நான் சொன்னதிற்காக ஒரு பத்து நிமிடம் ஏதோ பாட புத்தகங்களை உருட்டினான். திரும்பவும் என்னிடம் வந்து “அம்மா போர் அடிக்குது, இப்போ நான் என்ன செய்வேன்? என்றான். இன்று முழுதும் இந்த கேள்வியை இன்னும் எத்துனை முறை நான் கேட்க வேண்டுமோ தெரியவில்லையே என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.
அவன் தன் நண்பனுக்கு போன் செய்து பார்த்தான். அவனும் வீட்டில் இல்லை. “அம்மா ப்ளீஸ் கொஞ்ச நேரம் நான் என் விடீயோ கேம் விளையாடட்டுமா?” என்று பாவமாக கேட்டான். அப்படி கெஞ்சி உருகி கேட்கும் போது உருகாத மனமும் தான் உண்டோ? சரி என்று அரை மணி நேரம் விளையாட அனுமதித்தேன். அந்த அரை மணி நேரமும் முக்கால் மணி நேரமாக விரிவடைந்து முடிந்தது. மதிய சாப்பாட்டு நேரம் வந்து விட்டதால் இருவரும் ஒன்றாக சாப்பிட அமர்ந்தோம். நான் சாப்பிட்டு விட்டு எழுந்த அடுத்த அரை மணி நேரத்தில் அவனும் ஒரு வழியாக சாப்பிட்டு எழுந்தான். உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு அல்லவா ? எனக்கு தினமும் ஒரு அரை மணி நேரம் மதியம் சாப்பிட்ட பின் உறங்கி பழக்கமாகி விட்டதால் தூக்கம் என் கண்களை தழுவியது. “ரிஷி வா நாம் இருவரும் கொஞ்சம் படுத்து தூங்கலாம்”, என்றேன். அதான் ஏற்கனவே கூறியிருகிறேனே, தூங்குவது, அதுவும் பகலில் தூங்குவது அவனை பொருத்தவரையில் ஒரு குற்றச்செயல். படுக்க மறுத்துவிட்டு, என்னையும் தூங்க விடாமல் “அம்மா, I am feeling bored, what do I do now,",என்று என்னை நச்சரித்துக்கொண்டே இருந்தான்.
அவன் அக்காள் இருந்தால் ஏதோ இருவரும் கொஞ்சநேரம் சண்டையாவது போட்டுக்கொண்டு நேரத்தை கழிப்பார்கள். சிறிது நேரம் கதை புத்தகம் வாசித்தான். மீண்டும் என்னிடம் வந்து அதே, “இப்போ நான் என்ன செய்வது” என்ற கேள்வியை கேட்டான். இருவரும் ஏதாவது போர்ட் கேம் விளையாடலாம் என்று முடிவு செய்து சிறிது நேரம் ‘மாஸ்டர் மைண்ட்” என்ற கேம் விளையாடினோம். அதுவும் சிறிது நேரத்தில் அவனுக்கு போர் அடித்து விட்டது. அதை மூட்டை கட்டி வைத்து விட்டு “போய் நன்றாக குளித்து விட்டு வா” என்றேன். தண்ணீரில் சிறிது நேரம் விளையாடினால் ஆவது என்னை நச்சரிக்க மாட்டான், அவனுக்கு பொழுதும் கொஞ்சம் போகும் என்ற நினைப்பு எனக்கு. என் தோழியிடம் இருந்து எனக்கு போன் வந்தது. பிறகு கூப்பிடுகிறேன் என்று கூறிவிட்டு வைத்து விட்டேன். ஏனென்றால் அவன் வீட்டில் இருக்கும் பொழுது நான் யாரிடமும் போனில் பேச முடியாது. இது தான் சாக்கு என்று உடனே டிவியை ஆன் செய்து விட்டு பார்க்க ஆரம்பித்து விடுவான். இல்லையேல் , கம்ப்யூட்டரில் கேம் விளையாட ஆரம்பித்து விடுவான். நானும் போனில் சுவாரஸ்சியமாக பேசிக்கொண்டிருந்தால் கவணிக்க மறந்து விடுவேன் அல்லது கண்டும் காணாதது போல் விட்டு விடுவேன். இது தான் சமயம் என்று அவனும் சந்தில் சிந்து பாடி விட்டு போய்விவான். எல்லா பெற்றோருக்கும் இருக்கும் வீக் பாயிண்ட்டே இது தான். குழந்தைகளும் இதனை நன்றாக புரிந்து கொண்டு நாம் போனில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது தான் அவர்களுக்கு வேண்டியதை சாதித்து கொள்வார்கள்.
மாலை என் மகள் பள்ளியில் இருந்து வீடு திரும்பினாள். இப்பொழுது அவள் பங்கிற்கு அவள் டீவி முன் அமர்ந்தாள். அவள் பார்க்கும் பொழுது அவளுடன் இவனும் சேர்ந்து கொண்டு பார்க்க ஆரம்பித்தான். பின் மாலை சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு, கீழே அவன் தன் நண்பர்களுடன் விளையாட போய் விட்டான். எனக்கு ஒரு பிரளயமே முடிந்தது போல் இருந்தது. இனி “ I am bored , what do I do now" என்ற கேள்வியை இன்று இதற்கு மேல் கேட்க வேண்டாம் என்று நினைத்துக்கொண்டு என் மாலை வேளைகளை நான் தொடர ஆரம்பித்தேன். வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது பல கேள்விகள் எனக்குள் தோன்ற ஆரம்பித்தன. இந்த ஒரு நாள் விடுமுறை எனக்கு பல உண்மைகளை உணர வைத்தது. இக்கால குழந்தைகளுக்கு டிவி, விடியோ கேம், மொபைல் போன், கம்ப்யூட்டரை விட்டால் விளையாட வேறு எதிலும் நாட்டம் இல்லை. அது மட்டுமல்ல போர்ட் கேம்ஸ் விளையாட பொருமை இல்லை. நான் பத்து வயது சிறுமியாக இருந்த பொழுது என் பிறந்தநாளுக்கு என் மாமா ஒருவர் “ட்ரேட்” என்ற போர்ட் கேமை வாங்கி தந்தார். நான் அதனை பொக்கிஷமாக போற்றி விளையாடுவேன். விடுமுறை நாட்களில் என் பெற்றோருடன் சீட்டுக்கட்டு விளையாடுவது உண்டு. நண்பர்களுடன் சொப்புச் சாமான், டீச்சர் விளையாட்டு, திருடன் போலீஸ் விளையாட்டு, தாயம், பல்லாங்குழி, என்று பலவாறு விளையாடியதுண்டு. ஆனால் இன்று என் மகனின் நண்பர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தாலும் சரி அல்லது இவன் அவர்களின் வீட்டிற்குச் சென்றாலும் சரி உடனே ஏதாவது ஒரு electronic gadgetயை வைத்துக்கொண்டு தான் விளையாட ஆசைப் படுகிறார்கள். அவை இல்லை என்றால் உலகமே இருண்டது போன்று அவர்களுக்கு தோன்றுகிறது. செய்வதறியாது தவிக்கிறார்கள். அவற்றை வைத்தில்லாதவர்களை வேற்று கிரக மக்களை பார்ப்பதை போன்று பார்க்கிறார்கள். சில சமயம் ஒருத்தன் மட்டும் ஏதாவதொரு வீடியோ கேம் வைத்து இருப்பான். அதுவரை ஓடி விளையாடிய மற்றவர்கள் அந்த வீடியோ கேமை பார்த்தவுடன் விளையாடுவதை விட்டு விட்டு பலா பழத்தை மொய்க்கும் ஈக்கள் மாதிரி அந்த ஒருவனை சுற்றி நின்று கொண்டு தலை கவிழ்ந்து , தன் நிலை மறந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள். வீடியோ கேம் வைத்திருக்கும் அவன் தான் அந்த நிமிட ஹீரோ. விளையாட வேண்டிய அவசியம்கூட இல்லை அதனை பார்த்துக்கொண்டு இருந்தாலே பிறந்த பயனை அடைந்து விட்டதாக ஆனந்தமாக காணப்படுவார்கள். அந்த gadgets மேல் அவர்களுக்கு அப்படி ஒரு ஈர்ப்பு..
பெற்றோராகிய நமக்கும் அவர்களுடன் விளையாட பொறுமை இருப்பது இல்லை. அப்பொழுது எல்லாம் தாத்தா, பாட்டி அத்தை, மாமா,என்று யாராவது ஒருவர் கூட இருந்தார்கள். வேலை பளுவை பகிர்ந்து கொண்டார்கள். தனித்தனி தீவுகளாக வாழும் நமக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்தை அக்கடா என்று கழிக்கத்தோன்றுகிறது. நம்மை தொந்தரவு செய்யாமல் ஏதாவது அமைதியாக செய்தால் சரி என்று நாமும் குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டு விடுகிறோம். நீண்ட தூர பயணங்களின் போது முன்பெல்லாம் இயற்கையை ரசிக்க நம் பெற்றோர் கற்றுக்கொடுத்தார்கள். மரம், செடி, கொடி, இயற்கை காட்சிகள், மக்கள், என எல்லாவற்றையும் ரசித்து வழியில் கிடைத்த தின்பண்டங்களை கேட்டு வாங்கி சாப்பிட்டு சந்தோஷம் அடைந்தோம். ஆனால் இப்பொழுதோ பயணத்தின் போது நம்மை தொந்தரவு செய்யகூடாது என நினைத்து ஒரு வீடியோ கேமையோ, மொபைலையோ, அல்லது எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு சீட்டுக்கும் பின் பக்கத்திலேயே ஒரு டிவி ஸ்கீரீன் வைத்து அவரவர் விருப்பத்திற்கேற்ப படங்களை போட்டு காண்பிக்கிறோம். சண்டை வராமல் இருக்க அதிலும் தனித்தனி ஸ்கிரீன். யாரும் யாருடனும் பேசும் சந்தர்ப்பத்தையே ஏற்படுத்துவதில்லை. அவர்களுடன் பேசிக்கொண்டே பயணிக்க அலுப்படைகிறோம். என் தந்தை பயணங்களின் போது எங்களுக்கு பல விஷயங்களை சொல்லிக்கொடுத்தது நினைவிற்கு வருகிறது. என் தந்தை எங்களுக்கு செய்ததை நான் என் குழந்தைகளுக்கு செய்ய அலுப்படைகிறேன். இது தான் காலக்கோலாறு என்பதா??
ஓடும் வண்டியில் இப்படி பார்ப்பது கண்களுக்கு எவ்வளவு கெடுதல்?இதனை நாம் உணர்ந்தாலும் அப்பொழுதிற்கு நமக்கு தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம். பிள்ளைகளை சந்தோஷமாக வைத்துக்கொள்கிறோம் என்ற பேரில் அவர்களின் உடல் கேட்டிற்கு நாமே வித்திடுகிறோம். இதனால் கண்ட பலன் என்ன தெரியுமா? அவர்களை சுற்றி என்ன நடக்கிறது என்று அவர்களுக்கு தெரிவதில்லை. அவர்களுக்கென்று ஒரு உலகத்திலேயே வலம் வருகிறார்கள். அதனை விட்டு அவர்களை வெளியில் இழுத்தால் தண்ணீரில் இருந்து வெளியே எடுக்கப் பட்ட மீனாய் தவிக்கிறார்கள். மேலும், சிறு வயதிலேயே குழந்தைகள் பலர் கண்ணாடி அணிய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. பல குழந்தைகள் உட்கார்ந்தே விளையாடுவதால் உடல் பருமனாகி அவதிக்குள்ளாகிறார்கள். இப்பொழுது காட்டுத்தீயாய் நம்மை சுட ஆரம்பித்திற்கும் சக்கரை வியாதிக்கு மூல காரணமே மாறிப் போன நம் வாழ்க்கை முறை தான். அதுவும் நம்முடைய அடுத்த தலை முறையினர் இந்த கொடிய நோய்க்கு கணக்கில்லாமல் ஆளாகி வருகிறார்கள். நம் வாழ்க்கை முறை மாறியதற்கு யாரை குறை கூற முடியும்? நாம் யாரையும் குறை கூறாமல் பொறுப்பை நம் மேல் சுமந்து நம்முடைய குழந்தைகளை இந்த 'gadget addiction" லிருந்து காக்கவேண்டும்.
மாறிவரும் இந்த சூழல்களால் ஏற்படும் தீமையை உணர்ந்த CBSE board, "integrity club" என்ற ஒரு அமைப்பை பள்ளிகளில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இதன் நோக்கம் என்ன வென்றால் குழந்தைகளுக்கு, டிவி, கம்ப்யூட்டர் , தொலைபேசி இல்லா வேறு உலகை அவர்கள் முன் காட்டுவது. வாழ்க்கை கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது, இயற்கையை ரசித்து அதனுடன் ஒன்றி வாழ்வது போன்றதை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது தான் இதன் நோக்கம். . Moral values என்றால் என்ன , எப்படியெல்லாம் நம் வாழ்வில் அது முக்கியமானது என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பதும் அதன் மற்றொரு நோக்கமாக பார்க்கப்படுகிறது. . முன்னொரு காலத்தில் எதார்த்தமாக நாம் கற்றுக்கொண்ட பல நல்ல விஷயங்களை இன்று “க்ளப்” வைத்து சொல்லிக்கொடுக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். சுற்றத்தார், உறவினர்கள், நண்பர்கள், சமுதாயம் என்று எல்லா பக்கங்களிலிருந்தும் நாம் பல விஷயங்களை கிரகித்து கற்றுக்கொண்டோம். ஆனால் இன்று நமக்குத்தான் எல்லாவற்றிற்கும் soft ware உள்ளதே. நம் குழந்தைகளுக்கு ஏதாவது கற்றுத்தர வேண்டும் என்றால் உடனே சந்தையில் கிடைக்கும் சிடியை வாங்கி கொடுத்து விடுகிறோம். நல்லது கெட்டது எதையுமே குழந்தைகளுடன் அவர்ந்து , பேசி புரிய வைக்க நமக்கு நேரம் இருப்பது இல்லை. இல்லாவிட்டால் எதற்கெடுத்தாலும் கிளாஸிற்கு அனுப்புகிறோம். Dance class, art class, music class, grooming class, tuition class, coaching class என்று எல்லாவற்றிற்கும் வகுப்புக்கள் காளானைப் போல் முளைத்துவிட்டன. பின் நாம் ஏன் வீணாக நம்மை வருத்திக்கொண்டு குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இப்பொழுது பெற்றோரிடத்தில் வேரூன்றிவிட்டது. இதற்கெல்லாம் காசை செலவிட யோசிக்காத நாம் நம் நேரத்தை குழந்தைகளுடன் செலவழிக்க யோசிக்கின்றோம். கூகுளும் , யூ ட்யூபும் தான் இன்று பல குழந்தைகளுக்கு பெற்றோர் செய்ய வேண்டியதை செய்கிறது. இன்னும் சில காலம் கழித்து சக மனிதர்களுடன் பேசுவது எப்படி என்பதற்கும் வகுப்புக்களோ அல்லது சிடிக்களோ வந்துவிடும்.
அதுவும் வேளைக்குப்போகும் பெற்றோர்கள் தங்களால் தங்கள் பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை என்ற காரணத்தால் குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து சந்தோஷப்படவைக்கிறார்கள். அவர்களையும் அறியாமல் குழந்தைகளின் இந்த gadget addictionக்கு அவர்களே காரணமாகி விடுகிறார்கள். சில பெற்றோருக்கு, ‘ என் பிள்ளை எல்லாவற்றையும் டிவி பார்த்தே கத்துக்கிட்டான். மொபைல் போனில் எனக்கு தெரியாத applications கூட அவனுக்கு தெரியும். அவனே எல்லாவற்றையும் டவுன்லோட் பண்ணிவிடுவான். கம்ப்யூட்டரில் அவனுக்கு தெரியாத விஷயமில்லை, நான் எதுவுமே அவனுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. தானாகவே கத்துக்கொள்வான்,” என்ற பெருமை வேறு. அப்படி பட்ட பெற்றோருக்கு என்னிடம் உள்ள கேள்வி என்ன தெரியுமா? “பின் உங்களுக்கு உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் என்ன பங்கு? காசு சம்பாதித்து சேர்ப்பது தான் உங்கள் பங்கா? இந்த முறை மாற வேண்டும். Parents should spend quality time with the children. இதன் மூலம் தான் மனித நேயம் , உறவுகள் , பற்றி அவர்களுக்கு புரியவைக்க முடியும் . இல்லையேல் நம் குழந்தைகள், gadgets உடன் தான் வாழ்க்கையை வாழ முடியும். வாழ்க்கையில் அன்பு, பாசம், நேசம், புரிதல், விட்டுக்கொடுத்தல், பகிர்தல் என பல அழகான விஷயங்கள் இருக்கின்றன. நம்முடைய இந்த பண வேட்டையில் நம் குழந்தைகளை நாம் கவனிக்க மறந்து அவர்களை "consumerism' என்ற வலையில் சிக்க வைத்து அவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்குகிறோம். இப்படியே இந்த காலாச்சாரம் தொடருமானால் எதிர்காலத்தில் வயதான பின் ரோபோக்கள் தான் நமக்கு பிள்ளைகளாக இருக்க முடியும். ரத்தமும் , சதையுமான மனித உறவுகளுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். நம் சந்ததியினரை மனிதர்களாக வாழ வழி நடத்துவதா இல்லை மனித ரோபோக்களாக வாழ வழி செய்வதா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். என் தேடுதல் மீண்டும் தொடரும்......

Subscribe to:
Posts (Atom)