Friday, October 25, 2019

மருதாணி எனும் மைலாஞ்சி......

தீபாவளிக்கு இன்னும் ஓர் நாள் தான் இருக்கிறது. ஊரில் இருந்திருந்தால் சொந்த பந்தங்களோடு கொண்டாடி இருக்கலாம். சரி பண்டிகை feel வரவேண்டுமே என்று தீபாவளி சந்தையை பார்க்க போய் இருந்தேன். ஒரே கூட்டம். தீபாவளிக்கு ஜவுளி வாங்குபவர்களும், தோரணங்கள், தீபங்கள், விளக்குகள், ப்ளாஸ்டிக் கோலங்கள் , என்று வித விதமாக தீபாவளிக்கு வேண்டிய பொருட்கள் வாங்க மக்கள் குவிந்து இருந்தார்கள். எங்கே திரும்பினாலும் மருதாணி cone விற்றுக்கொண்டு இருந்தார்கள். மருதாணி போட்டு விடுபவர்களும் இருந்தார்கள். அவர்களிடம் பெண்கள் தங்கள் கைகளில் மருதாணி போட்டுக்கொண்டிருந்தார்கள். பத்தே பத்து நிமிடங்களில் அழகாக இரண்டு கைகளிலும் மருதாணி கொண்டு ஓவியம் தீட்டி விடுகிறார்கள்.
தீபாவளி என்றாலே மருதாணி இட்டுக்கொள்வது ஒரு அத்தியாவசியத் தேவை போன்றது எனக்கு. எனக்கு மட்டுமல்ல பல பெண்களுக்கும் தான். அந்த மருதாணி குப்பிகளைப் பார்த்த பொழுது மனம் வாழ்க்கையின் பல பக்கங்களை திருப்பி பார்க்க ஆரம்பித்தது. தீபாவளிக்கு முதல் நாள் அம்மா மும்முரமாக பலகாரம் செய்து கொண்டு இருப்பார். நானும் என் தங்கையும் மருதாணி போட்டுக்கொள்ள தயாராகி விடுவோம். எங்கள் வீட்டு தோட்டத்திலேயே மருதாணி செடிகள் இருந்தது. அதில் இருந்து இலைகளைப் பறித்து கொண்டு வந்து விடுவோம். அடுத்தது அதை யார் அரைப்பது என்பது தான் பிரச்சனையே. நாங்கள் அரைத்தால் கை முழுதும் மருதாணி சாயம் பூசிக்கொள்ளும். அது நன்றாக இருக்காது. அம்மியில் வைத்துத்தான் அரைக்க வேண்டும். வீட்டில் வேலை செய்யும் விஜயாவை தாஜா செய்து அரைத்து தரச்சொல்வோம். அவள் பாவம், வேறு வழியின்றி ஒத்துக்கொள்வாள். கொஞ்சம் புளி சேர்த்து மையாக அந்த இலைகளை அரைத்து வாங்கி வைத்துக்கொள்வோம். அதில் கொஞ்சம் எலும்பிச்சை சாறும் கலந்து வைத்துக்கொள்வோம். பகல் நேரத்தில் போட மாட்டோம். ஓடி ஆடி விளையாட முடியாது. Bathroom போவது கஷ்டமாக இருக்கும். எனவே இரவு படுக்க போவதற்கு முன் போட்டுக்கொள்வோம்.
அப்பொழுதெல்லாம் , இப்பொழுது இட்டுக்கொள்வது போல அழகழகான designகள் போட்டுக்கொள்ளத் தெரியாது. உள்ளங்கையில் ஒரு பெரிய வட்டம். அதைச் சுற்றி சிறு சிறு வட்டங்கள் அவ்வளவு தான். பின் விரல் நுனிகளில் குப்பிகைகள் போல வைத்துக்கொள்வோம். மிகவும் சிறுமியாக இருந்தபொழுது கை நிறைய சிவக்க வேண்டும் என்ற பேராசையில் கை முழுதும் பூசிக்கொண்டதும் உண்டு. ஓர் வயது வந்த பின் அப்படி பூசிக்கொள்வது அழகல்ல என்று புரிந்து, வட்டங்கள் இட்டுக்கொள்ள ஆரம்பித்தோம். புள்ளிகள் வைத்துக்கொள்வதே அழகென்று நினைத்தோம். சிலர் புரங்கையில் வைத்திருப்பதைப் பார்த்து ஆசைப்பட்டு புரங்கையில் ஒரு சிறு வட்டம் வைத்ததும் உண்டு. நான் மாநிறம் என்பதால் அது எடுப்பாக தெரியாது. அதில் சிறு வருத்தம் இருக்கத்தான் செய்தது.
மருதாணி வைத்துக்கொண்ட பின் அத்தோடு அந்த கூத்து நிற்காது. அப்பொழுது தான் உடம்பில் அங்கங்கே அரிக்கும். இங்கே சொரி, அங்கே சொரி என்று விஜயாவை பாடாய் படுத்துவோம். நேரம் பார்த்து மூக்கு நுனியில் அரிக்கும் பாருங்கள் ! அப்பப்பா!ஆனாலும் ஆசை யாரை விட்டது. இரண்டு கைகளையும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டி மூக்கை தோள் பட்டையில் உரசிக்கொள்வோம். சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு விரல் கொண்டு எங்காவது சொரிந்து விட்டால் மீண்டும் அந்த விரலில் மருதாணி போட வேண்டும். தங்கைக்கு சளி பிடிக்கும் என்பதால் அம்மா அவளை கொஞ்ச நேரம் வைத்து இருந்து விட்டு மருதாணியை கழுவி எடுக்க சொல்வாள். மருதாணி குளிர்ச்சியாம். ஆனால் அவள் கேட்க மாட்டாள். மருதாணி போட்டுக்கொள்ள வேண்டும் என்றால் இருப்பதிலேயே பழைய துணியை உடுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால் , மருதாணி கரை பட்டால் துணியிலிருந்து நீக்குவது கடினம். தண்ணீர் குடிக்க வேண்டுமானலும் யாரவது ஊட்டி விடவேண்டும்.

படுக்கை கூட பாயில் தான். மெத்தையில் படுக்க முடியாது. தீபாவளி வேறு மழைகாலத்தில் வரும். இரவு நேரங்களில் குளிரும். ஆனாலும் போர்த்திக்கொள்ள பழைய போர்வை தான் தருவார் அம்மா. தூங்கும் பொழுது ஏசு நாதர் சிலுவையில் அரைந்ததைப் போல் இரண்டு கைகளையும் நீட்டி வைத்துக்கொண்டு படுப்போம். அதில் வேறு சண்டை வரும்--நீ என் மருதாணியை கலைத்து விட்டாய் என்று. படுத்தப் பின் போர்வையை போர்த்த ஓர் ஆள் வேண்டும். தூங்கும் பொழுது மருதாணி காய்ந்து, அங்கிங்கெங்கும் திரும்பும் பொழுது விழாமல் இருக்க சக்கரை கலந்த தண்ணீரை தெளித்து விடுவார் அம்மா. சக்கரைத் தண்ணீர் மருதாணியை காய்ந்தாலும் கீழே விழாதபடிக்கு பிடித்து வைத்திருக்கும். அப்பொழுது தான் கைகள் நன்றாக சிவக்கும். பாயில் படுப்பதால் சக்கரைத் தண்ணீருக்கு எங்கே எறும்புகள் மொய்த்து விடுமோ என்ற பயமும் இருக்கும். ஆனாலும் சக்கரைத் தண்ணீர் தெளிக்காமல் படுத்ததில்லை.காலையில் எழுந்தவுடன் முதலில் கைகளை விரித்து சிவந்து இருக்கிறதா என்று பார்ப்போம். இரண்டு கைகளையும் ஒன்று மேல் ஒன்று வைத்து உரசி காய்ந்து இருக்கும் சொச்ச மிச்ச மருதாணியை பாயிலேயே உதிரச் செய்து விட்டு கைகளை கழுவச் செல்வோம். கைககளை கழுவிய பின் யார் கை நன்றாக சிவந்து இருக்கிறது என்று வேறு ஒப்பீடு நடக்கும். பின் கொஞ்சம் தேங்காய் எண்ணெயை எடுத்து கைகளில் பூசிக்கொள்வோம். அப்பொழுது தான் மருதாணி சாயம் பளீர் என்று இருக்கும். எளிதில் மங்காது. எல்லாம் கேள்வி ஞானம் தான்.
ஆண்பிள்ளைகளும் மருதாணி வைத்துக்கொள்வார்கள். அவர்கள் உள்ளங்கைகளில் ஒரே ஒரு வட்டம் அவ்வளவு தான். இப்பொழுதெல்லாம் வட இந்தியர்களின் influenceஆல் அழகாக மருதாணி இட்டு விடுகிறார்கள். முழங்கை அளவிற்கு சித்திரங்கள் வரைந்து தள்ளுகிறார்கள். பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் , சிறுவர்களும் கூட இந்த கலையில் கை தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். coneகள் அறியப்படுவதற்கு முன் சில காலம் ஆவின் பால் வரும் பைகளை கழுவி அதனை ஒரு கோன் போல செய்து அடியில் ஒரு சிறு துளையிட்டு மருதாணியை கொண்டு நிரப்பி கோன்களாக பயன் படுத்தியதுண்டு.என் வலது கை கொண்டு இடது கையில் ஓரளவிற்கு ஏதோ ஒரு பூவை போட்டு விடுவேன். ஆனால் இடது கை கொண்டு வலது கையில் போட வராது. ஏதாவது ஒரு டிசைனை கிறுக்கிக் கொள்வேன். சில நேரங்களில் தோழிகளிடம் போட்டுக்கொள்வேன்.
இலைப் பறித்து அரைத்து இட்டுக்கொள்ளும் மருதாணி ஒரு வித ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். சில நாட்களுக்கு பிறகு வெளுக்கும் பொழுது ஒரே சீராக வெளுக்கும். ஆனால் கோன் கொண்டு போட்டுக்கொள்ளும் மருதாணி அடர்ந்த வண்ணத்தில் சிவக்கும். அதே நேரம் ஓரிரு நாட்களிலேயே வெளுக்க துவங்கும். அப்படி வெளுக்கும் பொழுது அங்கங்கே சாயம் போனது போல் காட்சி அளிக்கும். பார்க்க அசிங்கமாக இருக்கும். இலை கொண்டு போடப்படும் மருதாணிக்கு மருத்துவ பயன்கள் உண்டு. இந்த கோன்களில் ரசாயனம் இருப்பதால் எந்த வித மருத்துவ பயனும் கிடையாது. ஆனால் இப்பொழுதெல்லாம் மருதாணி செடிகளை பார்ப்பதே அரிதாகி விட்டது. எனவே வேரு வழியில்லாமல் கோன்களைத்தான் உபயோகப்படுத்தும்படி ஆகி விடுகிறது. எப்படியோ தீபாவளிக்கு பலகாரம் செய்து கைகள் சிவக்கிறதோ இல்லையோ, மருதாணி இட்டுக்கொள்வதால் சிவந்து போகும். இதோ நானும் இன்று இரவு மருதாணி இட்டுக்கொண்டு தீபாவளியை வரவேற்க ஆயத்தமாக போகிறேன்.

Sunday, October 6, 2019

அசுரன் விமர்சனம்

அசுரன் படம் வெளிவந்த நாளிலேயே அசுர வேகத்தில் படம் பார்க்க சென்று விட்டோம். அடித்த அசுர காற்றில் இருந்து இன்னும் மீண்டு வர முடியவில்லை. அருமையான படம். நிறைவான  கதாபாத்திரங்கள். அட்டகாசமான திறமைகளின் வெளிப்பாடு. மிரட்டும் ஒளிப்பதிவு, மனதை படக், படக் என அடித்து கொண்டே வைத்திருக்கும் இசை. ஆழமான திரைக்கதை மற்றும் இயக்கம். சிந்திக்க வைக்கும் கருத்து. ரசிக்க தூண்டும் வசனம். மொத்தத்தில் இது “அடி தூதூள்ள்”!

இப்படத்தில் ஒரு தந்தையாக தனுஷ் மின்னுகிறார். தந்தையாகவே வாழ்ந்திருக்கிறார். வெற்றிமாறன் போன்ற ஒரு இயக்குனர் கைகளில் களிமண்ணாக தனுஷ் மாறிவிடுகிறார். வெற்றிமாறன் அவரை அழகாக உருமாற்றுகிறார், உருவாக்குகிறார், உயிர் கொடுக்கிறார். அவரின் கைகளில் வளைந்து, நெளிந்து ஒத்துழைப்பு கொடுத்து அழகான வடிவம் பெறுகிறார் தனுஷ். தன் பிள்ளைகளின் நலனுக்காக எப்படி தான் கட்டிக் காத்த சூடு , சொரணை எல்லாவற்றையும் இழக்க பெற்றோர் தயங்குவதில்லை என்ற நிதர்சன உண்மையை அழகாக நடித்து காட்டி இருக்கிறார்.

இத்தருணத்தில் இரண்டு மாதங்களுக்கு முன் என் வீட்டில் நடந்த சம்பவம் நினைவிற்கு வருகிறது. என் மகனின் ட்யூஷன் ஆசிரியருக்கும் எனக்கும் இடையில் ஒரு கருத்து வேறுபாடு. அவர் எடுத்த வகுப்புகளின் எண்ணிக்கையும் நான் கணக்கு வைத்திருந்த எண்ணிகையும் ஒத்து போக வில்லை. நான் சொல்ல வந்த விஷயத்தை அவர் ஏற்றுக் கொள்ளும் மன நிலையிலும் இல்லை. அவர் மனதில் தோன்றியதை எல்லாம் message ஆக அனுப்பினார். எந்த விளக்கத்தையும் ஏற்க மறுத்து , இனி என் மகனுக்கு வகுப்புக்கள் எடுக்க போவது இல்லை என்று கடினமாக கூறிவிட்டார். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. என் மீது எந்த தவறும் இல்லை என்று தெரிந்து இருந்தும் அவரிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டேன். என் சுய மரியாதையும் விட்டு விட்டு என் மகனுக்காக மன்னிப்பு கேட்டேன். அவன் பன்னிரெண்டாம் வகுப்பில் இருக்கிறான் அவனுக்கு அவரின் உதவி மிகவும் தேவை. இத்தருணத்தில் என் சுயமரியாதை எனக்கு பெரிதாக தெரியவில்லை. என் மகன் கூட,”அம்மா விடுங்கள் நான் சமாளித்துக் கொள்கிறேன். நீங்கள் எதற்காக தவறேதும் செய்யாமல் அவரிடம் மன்னிப்பு கேட்கிறீர்கள்?” என்றான். எனக்கு வேறு வழியே தெரியவில்லை. அந்த சூழ்நிலையில் அவனின் எதிர்காலமே கண் முன் தோன்றியது.

இப்படத்தில் தனுஷ் அப்படி மனம் , ரோஷம் பார்க்காமல், தன் மகனின் கடுஞ்சொல்லை கூட பொருட்படுத்தாமல் தன் குழந்தைகளின் நலனுக்காக பிறந்தது முதல் ஒட்டிக்கிடக்கும் மானம் ரோஷம் எல்லாவற்றையும் தள்ளி வைக்கும் பொழுது ஓர் பாசமிக்க தகப்பனாக, பொருப்புள்ள குடும்ப தலைவனாக மிளிர்கிறார்.

மஞ்சு வாரியாரை பார்க்கும் பொழுது கதைகளில் படித்த, புலியை முறத்தால் அடித்து  விரட்டிய அந்த தமிழச்சியே ஞாபகத்திற்கு வருகிறார். பாசமான அதே சமயம் கண்டிப்பான , வீரமான, வீரத்தை தன் பிள்ளைகளுக்கு பாலாக ஊட்டி வளர்த்த தாயாக மின்னுகிறார். அவர் நடையிலேயே அவரின் மிடுக்கும், தைரியமும் தெரிகிறது. கணவன் மனைவி இடையே மிகுந்த ஈடுபாடு இருக்கும் பட்சத்தில் எப்படி அந்த அன்பை இருவரும் அழகாக பார்வை மூலமாகவும், வார்த்தை மூலமாகவும், கண்டிப்பு மூலமாகவும் , செய்கைகள் மூலமாகவும் ஓர் கவிதையாக பரிமாறிக்கொள்ள முடியும் என்பதற்கு தனுஷ், மஞ்சு வாரியார் ஜோடியே சாட்சி. தனுஷ் குடித்து விட்டு வாந்தி எடுக்கும் போது சளித்துக்கொள்ளாமல் சுத்தம் செய்வதாகட்டும், அவருக்கு அடிப்பட்டு ரத்தம் வரும் போது அதை தன் முந்தானை கொண்டு துடைப்பதில் ஆகட்டும், தன் கணவர் நடக்கும் அக்கிரமங்களுக்காக ஆத்திரம் கொண்டு எதிர் நோக்காமல் அமைதியாக கையாள்வதை பார்த்து கோபம் கொள்வதில் ஆகட்டும் , மஞ்சு வாரியார் ஓர் தாயாய், மனைவியாய் ஒளிர்கிறார். ஒரு குடும்ப தலைவி எப்பேற்பட்ட சூழ்நிலையிலும் நிலைகுலையாமல் நிதானமாக கையாளுபவளாக இருக்கும் பொழுது எப்படிபட்ட சூழ்நிலையையும் அந்த குடும்ப தலைவனால் கையாள முடியும் என்பதற்கும் இந்த ஜோடி ஓர் எடுத்துக்காட்டு. தங்கள் குடும்பத்தில் நடந்த இழப்புகளுக்கு அழுது, கூப்பாடு போட்டு ஊரை கூட்டாமல் நிதானமாக ஒரு குடும்பமாக யோசித்து முடிவெடுக்கிறார்கள்.

இளம் கன்று பயம் அறியாது என்பதற்கு படத்தில் தனுஷின் மகன்களாக வரும் இருவராகட்டும், இளம் வயது தனுஷ் ஆகட்டும் இந்த கதாபாத்திரங்களே சான்று. ரத்தம் சூடாக இருக்கும் பொழுது ஒரு பிரச்சனையை அனுகும் விதமும் அதே ரத்தம் சுண்டும் பொழுது , வயதாக ஆக ஒருவன் ஓர் பிரச்சனையை அனுகும் முறையும் எப்படி வேறுபடுகிறது. ஆனால் சமயம் வரும் பொழுது கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது வெளிப்படத்தான் செய்கிறது. பின் விளைவுகளை யோசிக்காமல் மகன்கள் எடுக்கும் முடிவு எப்படி தன் குடும்பத்தை ஆட்டம் காணச்செய்தது என்பதை உணர்ந்து தன் உறவுகளை காக்க வயதான தனுஷ் நிதானமாக செயல் படுகிறார்.

சொத்து, ,சுகம், மானம், மரியாதை , எல்லாவற்றையும் விட ஒருவனுக்கு தன் குடும்பமே பெரிது என்பது தனுஷ் கதாபாத்திரம் மூலம் வெளிப்படுகிறது. அன்பும் அரவனைப்பும் மிகுந்த குடும்பங்கள் எப்பேற்பட்ட சூழ்நிலையிலும் நிலை குலைவதில்லை. இப்பொழுதெல்லாம் நமக்குத்தான் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க பாடம் கற்க வேண்டி இருக்கிறதே!. ஒரே வீட்டிற்குள் இருந்தாலும் ஆள் ஆளுக்கு கைத்தொலைபேசியுடன் உறவாடி, தனித்தனி தீவுகளாக வாழ்கிறோம். இப்படி இருக்கும் சூழ்நிலையில் எங்கிருந்து பாசப்பிணைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது? குழந்தைகள் தவறான பாதையில் போனப்பின் கண் கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் செய்ய விழைகிறோம். இவை எல்லாம் ஒரு வித பொறுப்புக்களை தட்டிக்கழிப்பதே ஆகும். இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் திருமண வயது அடைந்த பிள்ளைகளை வைத்து இருக்கும் எனக்கு தெரிந்த நிறைய பெற்றோர்கள் ”என் பிள்ளையை அவரையே தனக்கு ஏற்ற துணையை தேடிக்கொள்ள சொல்லிவிட்டேன். நாளைக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாம் பொறுப்பாக வேண்டாம் இல்லையா?” என்று முடிவெடுத்து இருக்கிறார்கள். பொறுப்புக்களை தட்டிகழிக்க பழகி கொண்டு இருக்கிறோம்.

இப்படத்தில் மகனுக்காக தந்தையும், அண்ணனுக்காக தம்பியும், அம்மாவிற்காக மகனும், ஊருக்காக தலைவனும், தந்தைக்காக மகனும், தங்கைக்காக அண்ணனும், காதலிக்காக காதலனும் , உறவிற்காக உற்றாரும் என்று பிறர் நலனுக்காகவே வாழும் நிறைய கதாபாத்திரங்கள் நம் கண் முன் வாழ்கிறார்கள். இப்படிப்பட்ட சுயநலமில்லா உறவுகளை பார்க்கையில் மனம் இளகுகிறது. தனுஷின் மகன்களாக வரும் கென், டிஜே, மஞ்சு வாரியாரின் அண்ணனாக வரும் பசுபதி, ப்ரகாஷ் ராஜ், நரேன், அம்மு அபிராமி, மற்றும் எல்லா கதாபாத்திரங்களுமே மிக நன்றாக அவரவர் பங்கை செய்து இருக்கிறார்கள்.

படத்தில் சாதி ஆதிக்கம் ஆழமாக அழகாக கையாளப்பட்டிருக்கிறது. இப்படி பட்ட சமூகத்திலா நாம் வாழ்ந்தோம் , வாழ்கிறோம் என்று நினைக்கையில் மனதில் ஓர் வலி ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. அந்த வலி படம் பார்த்து முடித்து வீடு வந்தும் மனதிலேயே ஊரல் போட்டு ஓர் சளிப்பை, வெறுப்பை, ஓரு ரணத்தை ஏற்படுத்துகிறது. ஆண்டான் அடிமை, சாதிக்கொடுமைகள் அன்றிருந்த மாதிரி இப்பொழுது இல்லை என்பதை நினைக்கையில் நிம்மதி ஏற்படுகிறது. முற்றிலும் அவை களையப்பட இன்னும் சில காலங்கள் ஆகலாம். ஆனால் அதில் முன்னோக்கி போய்க் கொண்டிருக்கிறோம் என்பதில் ஓர் எள் அளவு மகிழ்ச்சி.

படத்தில் வரும் திருநெல்வேலி தமிழை கேட்கும்  பொழுது தாமிரபரணி தண்ணீரை அப்படியே எடுத்து பருகிய நிறைவு ! வசனங்களில் ஆழமும் உண்டு, விவேகமும் உண்டு, அர்த்தமும் உண்டு, நக்கலும் உண்டு, நையாண்டியும் உண்டு! அந்த காடுகளை படம் பிடித்திருக்கும் விதம் நாமும் அந்த காடுகளுக்கிடையே ஊடுருவி சென்று வந்ததை போன்ற அனுபவம். நம் ஊரிலே நம் சொத்தாக எவ்வளவோ காடுகளும் வனங்களும் இருக்கின்றன. கண்களுக்கெட்டா தூரத்தில் இருக்கும் அமேசான் காடுகள் பற்றி எரிவதை பற்றி ஆத்திரம் அடையும் நாம் , நம் கண் முன்னே கொட்டிக்கிடக்கும் இயற்கை வனங்கள் அழிக்கப்படுவதை பார்த்து பொங்கி எழுவதில்லை. அப்படியே கோபம் கொண்டு எழுந்தாலும் இங்கிருக்கும் அரசியலும், அரசியல்வாதிகளும் அதனை நீர் ஊற்றி அனைத்து விடுகிறார்கள்.

படம் முழுதும் அரிவாளின் உரசலும், கத்திகளில் இருந்து வெளிவரும்  தீப்பொறிகளும், குத்தீட்டிகளின் பாய்ச்சலும் , கிழிக்கப்பட்ட சதையும், சிந்திக் கிடக்கும் ரத்தமும், எரிந்த சாம்பலும், மனிதம் மீது ஒரு வித பயத்தை ஏற்படுத்துகிறது. குத்தீட்டிகளும், வீச்சு அரிவாளும் இப்பொழுது அவ்வளவாக இல்லை என்றாலும் அதை விட பயங்கரமான ஆயுதங்கள் சத்தம் இன்றி ரத்தம் இன்றி நம்மை தாக்கிக்கொண்டு இருக்கின்றன. கதிர் வீச்சுகளும், புகை நச்சுக்களும், பூச்சி கொல்லிகளும் நம்மை நாலா பக்கத்திலிருந்தும் தினம் தினம் அனு அனுவாக கொன்றுக்கொண்டிருக்கின்றது. கத்தியும் அரிவாளும் கொண்டு தாக்குவது மட்டுமே வன்முறை இல்லை. சுத்தமான காற்றும், தண்ணீரும் , பசிக்கு உணவில்லா சமூகத்தில் வாழ்வதும், சுகாதரமற்ற சூழ்நிலையில் வாழ நேரிடுவதும், ஒருவரை ஒருவர் அக்கிரமாகவும், வக்கிரமாகவும் வார்த்தைகளால் தாக்கிக்கொள்(ல்)வதும் ,
சுயநலத்திற்காக பொதுநலத்தை காவு கொடுப்பதும், சுய லாபத்திற்காக ஒரு சமூகத்தையே போதைக்கும் ,புகழுக்கும் அடிமையாக்குவதும், பெண்களை, குழந்தைகளை வியாபாரப் பொருளாய் ஆக்குவதும், சுற்றுச் சூழலை கெடுத்து குட்டிச்சுவராக்குவதும், இவற்றிற்கெல்லாம் ஈடு கொடுப்பதும் , தூண்டு கோளாய் இருப்பதும், வன்முறையே! அப்படி பார்க்கையில் இப்பொழுது நாம் ஆயுதம் இல்லா பலவித வன்முறைகளை எதிர் நோக்குகிறோம், நாமும் நம்மை அறியாமல் ஓர் காரணியாகிவிடுகிறோம். இதை எல்லாம் யோசிக்கும் பொழுது படத்தில் வரும் சண்டை காட்சிகள் நமக்கு உண்மை இல்லை , அவை படத்திற்காக படம் ஆக்கப்பட்ட காட்சிகள் என்பதை எங்கோ உணர்த்திக் கொண்டு இருக்கிறது.தனுஷின் ஒவ்வொரு முக பாவத்தையும் படம் பிடித்த ஒளிப்பதிவாளருக்கும் , அழகாக எடிட் செய்த எடிட்டருக்கும் ஒரு பலத்த கைத்தட்டல்.

படத்தின் முடிவில் ஆழமான கருத்து முன் வைக்கப்படுகிறது. கல்வி ஒன்றே ஒருவனை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் என்பது வலி உருத்தப்படுகிறது. அதை கொண்டு வாழ்வில் மேன்மை அடைவது மட்டும் இல்லை முன்னேறுவது என்பது. அதையும் தாண்டி, அந்த உயர் நிலையை அடைந்த பின் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிறருக்கு செய்யாதிருத்தலே உண்மையான சமூக முன்னேற்றம் என்னும் கருத்தை இயக்குனர் முன் வைக்கிறார்.

சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதிகல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.” என்ற பாரதியின் வரிகளை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து வாழ்ந்தால் அழகான ஒரு சமுதாயமாக நம் சமுதாயம் மாறும். நம் வருங்கால சந்ததியர் நலமாக வளமாக வாழ வழி வகுக்கும்.

 ஊர் கூடி தேர் இழுந்தால் எப்படி இருக்கும் என்பதை இப்படத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் அவரவர் பங்கை பாங்குடன் செய்து இருக்கிறார்கள். நவராத்திரியில் வந்திருக்கும் அசுரன் ஒவ்வொரு மனிதனுள்ளும் மறைந்திருக்கும் அசுரனை வெளிக்கொணர்வதோடு மட்டும் அல்லாது அந்த அசுரனை வதம் செய்யவும் தூண்டுகிறது. நமக்குள் இருக்கும் அசுரனை கொல்வதற்கு ஒரு மகிஷாஷ மர்த்தினி தேவை இல்லை நாம் மனது வைத்தால் நாமே “மனிதனும் தெய்வமாகலாம்” என்பது போல் கூட வேண்டாம் , மனிதன் மனிதனாகவே வாழலாம். நீ வாழ்ந்து பிறரையும் வாழவிடு என்பதை மந்திரமாக கொண்டு வாழ்ந்தாலே போதும். மனிதம் தழைக்கும் மகிழ்ச்சி பெருகும்!!!

"அசுரன்" கட்டாயம் பார்க்க வேண்டிய நல்ல படம் !!!

Saturday, September 28, 2019

துளிர்

பயிராக இருந்தாலும்
பருவ மெய்திய மகவாக இருந்தாலும்
முளைவிட்டப் பின்
அடக்கி ஆளுதல் முடியாது....
வாய்ப்பையும் சந்தர்ப்பத்தையும்
தேடி தேடி பார்த்து
துளிர் விட பார்ப்பார்கள்!!

காலை காட்சி:

காலை காட்சி:
நேற்றைய இரவு காட்சி "Article 15" ஹிந்தி படம் பார்த்த பாதிப்பிலிருந்து நீங்காமல் , சனிக்கிழமை என்றும் பாராமல் காலை சீக்கிரமாகவே எழுந்தாகிவிட்டது. இங்குதான் எழுந்தவுடன் வாசல் தெளிக்க வேண்டும், கோலம் போடவேண்டும், பால் காய்ச்ச வேண்டும் என்ற கோட்பாடுகள் இல்லையே! என்ன செய்வது என்று தெரியாமல் நடை பயிற்சிக்கு கிளம்பி விட்டேன். அந்த காலை பொழுதில் பார்த்த காலை காட்சிகள் சில:
காட்சி 1: ஒரு கணவன் , மனைவி, குழந்தை. குழந்தைக்கு ஒரு வயது அல்லது ஒன்றரை வயது இருக்கும். strollerரில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது. மனைவி strollerஅய் தள்ளிக்கொண்டு வந்தார். கணவர், தூக்க முடியாத மாதிரி ஒரு back pack பையை முதுகில் மாட்டிக்கொண்டு வேக வேகமாக கூடவே நடந்து வந்தார். பேருந்து நிறுத்துமிடம் நோக்கி நடந்து கொண்டிருந்தனர் . கணவர் மனைவியிடம்,”அந்த stroller sideல இந்த துணிய வச்சுக்கோயேன். அதுல தான் ஒன்னும் இல்லல,” என்றார். அவர் நல்ல உயரம். அதற்கேற்ற உடல்வாகு. அவரை பார்த்தால் ஒரு backpack தூக்க தயங்குபவர் போல தெரியவில்லை. ஆனால் ஏனோ அந்த துணிகள் அவருக்கு கூடுதல் சுமையாக தோன்றியது போல. உடனே அவரின் மனைவி ,”அதெல்லாம் strollerல வைக்க முடியாது,நீங்களே பையில வச்சு தூக்கிட்டு வாங்க. இத கூடவா தூக்க முடியாது? பாப்பா stroller ல கண்டத வைக்க முடியாது!”என்று திட்ட வட்டமாக மறுத்துவிட்டார். அந்த காட்சியை பார்த்த பொழுது பரபரப்பு மிக்க இந்த வாழ்க்கையில் உழலுவதால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் அந்த மனைவி ,”இன்றைக்கு ஒரு நாளாவது எங்களுக்காக எதையாவது தூக்கிட்டு வா. வாரம் முழுக்க நான் தானே வீட்ட கவனிச்சுகறேன். புள்ளயதான் தூக்க மாட்ற அதோட துணிமணியனாச்சும் தூக்கி சும”என்று சப்தமில்லாமல் மனதிற்குள் முனுமுனுப்பது கேட்பது போல் இருந்தது. அவர்களை கடந்து நான் சென்ற பொழுது கண்கள் என் அனுமதி இன்றி அந்த strollerஅய் பார்த்தது. கண்டதை வைக்க முடியாத அந்த stroller ரில் மனைவியின் கர்ப்பிணி பை தொங்கி கொண்டே ஆடி ஆடி அவர்களுடன் போனது.............கணவரோ அந்த backpackகோடு விருக் விருக் என்று வேகமாக கோபத்தை அடக்கியபடி நடந்து சென்றார்.இதை எதையும் பற்றியும் புரியாத குழந்தை கையிலிருந்த கைதொலைப்பேசியில் எதையோ பார்த்துக் கொண்டு சிரித்த படி strollerரில் சென்றது.......
காட்சி 2: இரு பெண்மனிகள் தங்களின் எஜமானரின் நாய்களை நடைப்பயிற்சிக்கென அழைத்துக் கொண்டு சென்றனர். வேறு வேறு வீட்டு நாய்களாக இருக்க வேண்டும். காலை வேலையில் தங்களுக்கென நேரம் கிடைத்த சந்தோஷத்தில் இரு பெண்களும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அனேகமாக அவர்களின் உணர்வுகளின் பறிமாற்றமாக தோன்றியது. தன் குடும்பம் குட்டி யாவரையும் விட்டு விட்டு கடல் கடந்து எங்கோ ஒரு நாட்டில் பிழைப்பிற்காக வந்திருந்த இருவரும் தங்களின் சந்தோஷங்களையும், சோகங்களையும் கொட்டி தீர்க்க அந்த சந்தர்பத்தை உபயோக படுத்திக்கொண்டிருந்தனர். இருவரும் கைகளில் தத்தம் நாயின் கயிற்றை இருக பிடித்து இருந்தனர்.நாய்களுக்குள்ளும் ஒரு புரிதல் இருந்தது. அடிக்கடி சந்தித்திருக்க வேண்டும் போல் தோன்றியது. ஒன்று பெண் நாய். மற்றொன்று ஆண் நாய். இரு நாய்களும் அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டன . மூக்கோடு மூக்கு வைத்து தேய்த்து கொண்டன . கால்களால் ஒருவரை ஒருவர் வருடிக்கொண்டன . அவைகளின்் காதல் சம்பாஷனை சப்தமில்லாமல் அரங்கேறிக்கொண்டு இருந்தது. திடீரென்று பெண் நாய் லொள் என்று சத்தமாக குரைத்தது. உடனே ஆண் நாய் அந்த குரைப்பின் அர்த்தம் உணர்ந்து உடனே பின் வாங்கி நகர்ந்து சென்றது.நாய்களை பிடித்திருந்த பெண்கள் இருவருக்கும் தூக்கி வாரி போட்டது. தத்தம் நாயை இருக பிடித்து இழுத்து கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டனர். சிறிது நேரம் இரு நாய்களும் வால்களை ஆட்டிக்கொண்டு கண்களால் சமாதானம் அடைந்து அவரவர் வழியில் சென்றன. நாய் என்றாலும் NO என்று பெண் நாய் சொன்னால் அது NO தான். அதனை ஆண் நாய் புரிந்து ஒதுங்கிக் கொண்டால் அங்கே அழகான ஒரு புரிதலும் புரிதலுக்கு பின் ஒரு உறவும் மலர வாய்ப்பிருக்கிறது.
காட்சி 3:போகும் வழி நெடுகிலும் அழகான உயரமான, பச்சை பசேலென்ற மரங்கள் இருக்கும். அவைத் தான் பல விதமான பறவைகளின் வீடுகள் . இன்று மரங்களின் கிளைகள் எல்லாம் வெட்டப்பட்டு வெறுச்சோடி இருந்தது. தாய் மரம் தனிமையில் இருப்பது போல இருந்தது. கிளைகள் சில நேரங்களில் சுமை தான் . ஆனால் தாய் மரத்திலிருந்து வெட்டப்பட்ட கிளைகள் கீழே வாடி வதங்கி கிடந்தது மனித குழந்தைகளைப்போல்.
காட்சி 4: நடைப் பயிற்சி முடிந்து களைத்துப் போய் கொஞ்சம் நேரம் அமைதியாக அமர்ந்திருக்கலாம் என்று நீச்சல் குளத்தருகே அமர்ந்திருந்தேன். அடுக்குமாடி குடியிருப்பு என்பதால் காலையிலேயே புல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்ச ஆட்கள் வந்திடுவார்கள். கடந்த ஒரு மாதமாக இருப்பது போதும் என்று இல்லாமம் கடனுக்கு வாங்கி வெப்பத்தை கக்கும் சூரியனால் பச்சையாக இருக்க வேண்டிய புல் எல்லாம் காய்ந்த சருகாய் காட்சி அளித்தது. பச்சை நிறம் தண்ணீர் பாய்ச்சியவரின் சீருடையில் மட்டுமே இருந்தது. அவர் தண்ணீர் பாய்ச்சும் குழாயை , பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு போல் தன் தோளில் போட்டுக்கொண்டு தண்ணீரை அளவாகவும் அழகாகவும் பாய்ச்சிக்கொண்டிருந்தார். அவரின் முகத்தில் ஓர் கர்வம்,”இந்த புற்கள் உயிர் வாழ்வது என்னால் தான். நான் தான் இவற்றிற்கு தண்ணீர் பாய்ச்சுகிறேன்,”என்று. புற்களின் மேல் தூரளாக விழுந்த தண்ணீருக்கும் ஓர் கர்வம்,”நான் புற்களின் மேல் விழுவதால் தான் அவை உயிர் பிழைக்கின்றன,”என்று. அவரவர் கர்வம் அவரவர் தலையில் என்று நினைத்துக் கொண்டு என் தலையில் விழுந்த சூரிய ஒளியை இதமாக அனுபவித்த படி அமர்ந்திருந்தேன்.
காட்சி 5: நான் அமர்ந்திருந்த மேசைக்கு எதிர் திசையில் மூன்று முதியோர்கள் அமர்ந்திருந்தனர். வேற்று மொழி பேசுபவர்கள். அறுபத்தி ஐந்து வயதிலிருந்து எழுபது வயதிற்குள் இருப்பார்கள். மூவரும் நடை பயிற்சி முடித்து விட்டு அங்கு உட்கார்ந்து கொண்டு போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு எண்பது வயது கிழவி இரு பைகளை தூக்கி கொண்டு என்னை கடந்து சென்றார். நேர்த்தியாக உடை அணிந்திருந்தார். பைகள் கைப்பை அளவுதான். பெரிதான பைகள் இல்லை. தோளில் தொங்கவிட்டு இருந்தார். சற்று கூன் போட்ட படி அந்த வயதிற்கேற்ற முன் எச்சரிக்கையுடன் மெதுவாக நடந்து சென்றார். இதை கவனித்த அந்த மூன்று பெண்மணிகளின் கண்களும் ஒரு நிமிடம் அந்த கிழவி நடந்து சென்ற திசையிலேயே சென்றது. அவர்களுக்கு அந்த கிழவி பரிச்சயமானவரா அல்லது பரிச்சயம் இல்லாதவரா என்று எனக்கு தெரியாது. அவரை பார்த்து அளந்த ஒரு நிமிடத்தில் ஒரே நேரத்தில் மூன்று பேரின் உதடுகளும் ஏதோ இடைவிடாது பேசியது. யார் பேச்சை யார் கேட்கிறார்கள் என்று எனக்கு குழப்பமாகி போனது. அவர்களின் மொழி வேறு எனக்கு புரியாத ஒன்று. எனவே அவர்களின் உதடசைவை வைத்து நான் ஒன்றும் கணிக்க முடியவில்லை. அந்த கிழவியை அவர்கள் போற்றுகிறார்களா அல்லது தூற்றுகிறார்களா அல்லது சாதாரனமாக ஏதோ பேசி கொள்கிறார்களா என்று விளங்கவில்லை.அவர்கள் ஒன்றும் நம் பிக்பாஸோ அல்லது நம் தொலைக்காட்சியில் வரும் டாக் ஷோவோ பார்க்க வாய்ப்பில்லையே. பின் எப்படி இப்படி எல்லோரும் ஒரே நேரத்தில் பேசுகிறார்கள். ஒவ்வொருவரும் தான் பேசத்தான் ஆசை படுகிறார்கள். பிறர் பேசி தான் கேட்க யாருக்கும் ஆசை இருப்பதில்லை போல. அது எல்லா நாட்டவருக்கும் பொதுவான விஷயம் தான் போல. நடப்பவையை தான் நிழற் உலகத்தில் காண்பிக்கிறார்கள் . ஓரிரு நிமிடங்களுக்குப் பின் அந்த மூன்று வயதான பெண்மணிகளும் தங்களின் உதடுகளுக்கு பூட்டு போட்டு அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.
இத்தனை காட்சிகளை பார்த்து ரசித்து விட்டு என் கையில் கட்டி இருந்த கைகடிகாரத்தை பார்த்தவுடன் தான் ஞாபகத்திற்கு வந்தது,”ஆஹா வீட்டில் இரண்டு பேர் இன்னும் சயனத்திலேயே இருப்பார்களே. நாம் போய் அக்காட்சியை களைத்து மனசாட்சி சொல்லும் சொல் கேட்டு இந்த நாளை துவங்கவேண்டுமே “என்று..
இத்துடன் காலை காட்சிகள் முடிவிற்கு வந்தது........

மாதுளை பரல்கள்!

மாதுளை பரல்கள்!
செக்கச் சிவந்த
செம்மாதுளையினை
உரித்தெடுத்து
சிந்தாமல், சிதராமல்
கிண்ணத்தில் நிரப்பும்
போதெல்லாம்
அன்று
மதுரையில் சிதறிய
கண்ண்கியின்
பொற்சிலம்பும்,
அதனின்று தெரித்து சிதறிய
மாணிக்க பரல்களும்
ஏனோ மனக்கண் முன்
வந்து போகிறது!
மாதுளையின்
செஞ்சாறு கையில்
தெரிக்கும் பொழுது
அது தனக்கிழைக்கப்பட்ட
அநீதிக்கு அவள் வடித்த
ரத்தக்கண்ணீரோ
என்று மனம் பதபதைக்கிறது!
எத்துனை தலைமுறை ஆகும்
இந்த ரத்தக்கறை போவதற்கு
பழி தீர்வதற்கு!

மங்கா தங்கம்!

Image may contain: indoor

கல்லிலே
செதுக்க
நான் ஒன்றும்
சிற்பி அல்ல!
கிடைத்த
கூழாங்கல்லிலே
வரைய தடையேதும்
இல்லை!
நான் வரைந்த
அவன் உருவில்
வேண்டுமானால்
குறை இருக்கலாம்!
ஆனால் அவன்
குணத்தில்
என்றும்
மங்கா தங்கம்!

ஒழுக்கம்

செருப்பை போடும் போது
இருக்கும் ஒழுக்கம் ,அடக்கம்
அதை கழட்டி போடும் போது
பெரும்பாலும் இருப்பதில்லை!
சில மனிதர்கள்
கடன் கேட்கும் போதும்
கடனை திருப்பி கொடுக்கும் போதும் இதே நிலைபாடுதான்!

சிறைபிடிப்பு!

https://www.facebook.com/dhanabalan.geetha/videos/10217219279007788/?t=0

சிறைபிடிப்பு!
தோழி உடன் வரவில்லை என வருத்தத்துடன் தனியாக நடந்தேன்! கவலைப்படாதே நீ போகும் தூரம் வரை உடன் வர நான் இருக்கிறேன் என்று கூடவே வந்தாள் அவள்! பேசிக்கொண்டே நடந்தோம். அனுப்பிய விக்ரம் நலமா என்றேன். புன்சிரிப்பு ஒன்று மட்டும் உதிர்த்து கூடவே அமைதியாய் நடந்தாள்! விடவில்லை நானும். ஏன் அவனை சிறைபிடித்தாய் என்றேன்.” பெண் என்றும் பாராமல் , என் அனுமதி இன்றி என்னை அணு அணுவாய் படம் பிடிக்க எதற்காக வந்தான்? அவனுக்கு சொந்தமில்லா என்னை படம் பிடிப்பது மட்டுமல்லாது அதை இந்த உலகிற்கே வெட்ட வெளிச்சம் போட்டு காட்ட ஏன் நினைத்தான்? உங்கள் பூமியில் வேண்டுமானால் ஒருவரின் உத்தரவு இன்றி படம் எடுத்து போடுவது சகஜமாக இருக்கலாம் ஆனால் எங்கள் இடத்தில் அது இழிவான செயல்,” என்றாள். அவளும் பெண் தானே! அவளின் சுதந்திரத்தில் தலையிடுவது தவறு என்பதை உணர்ந்த பின் அவளுக்கு பதில் ஏதும் கூறமுடியாமல் அமைதியாக நடந்தேன்! விக்ரமின் விமோச்சனம் யார் கையில் என்பது பிடிபடவில்லை! வீடுவரை கூட நடந்து வந்த அவளை வீட்டிற்குள் அழைக்க கோடி ஆசை இருந்தும் அவளை வாசலிலேயே விட்டு விட்டு தனியாக வீட்டிற்குள் சென்று கதவிற்கும் மனதிற்கும் தாழ்பாழ் இட்டு சன்னல் வழியே அவளை பார்வையாலே வழி அனுப்பி வைத்தேன்!

இட்லி உப்புமா

மல்லிப்பூ நிறத்தில்
தூய்மையாய்
இட்லியாய்
பிறப்பெடுத்தேன்!
நாள் ஆக ஆக
குளிரில் சிறை வைக்கபட்டு
அனலில் தாளிக்கப்பட்டு
பலரால் நிந்திக்கப்பட்டு
சிலரால் புகழப்பட்டு
கடைசியில்
உப்புமாவாய் உதிர்ந்தேன்....

முயல் அம்மா! கொம்பு மான் அப்பா!

Image may contain: coffee cup and indoor
அமைதியான முயல் அம்மா!
குத்திக்கிழிக்கும் கொம்பு மான் அப்பா!
புல்லின் அழகை ரசித்து குட்டிகளுடன் பகிர்ந்து உண்ண காத்துகிடக்கும் அம்மா முயல்!
கிடைத்ததை உடன் விழுங்கும் அப்பா மான்!
அழகிய சந்தன நிறம் அம்மா முயலுக்கு!
அவளின் மீது வீசும் வாசம் போல்!
அடர்ந்த சாம்பல் நிறம் அப்பா மானுக்கு!
அவரின் கடுமையான கண்டிப்பை போல்!
உச்சி முதல் பாதம் வரை பூக்களின் ஆக்கிரமிப்பு அம்மா முயலுக்கு!
அவளின் மனம் போல!
உடல் முழுதும் நிரம்பி வழிகிறது
உண்ட இலை தழைகள் அப்பா மானிற்கு!
அவரின் தேவை உணர்த்த!
பிகு:இதில் எந்த உள்குத்தும் இல்லை! கோப்பைகள் பார்த்த பொழுது தோன்றியது அவ்வளவு தான். நினைவிற்கு வந்த பாடல் வரிகள் இதோ:
“கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னார் என்று
எழுதி வைத்தானே தேவன் அன்று....”
Make அப்படி இதில் யாரை குறை கூறமுடியும்.....

மரம் தேடி

Image may contain: plant

மரம் ஒன்றைத்
தேடித் தேடி
அலைந்தேன்
சற்றே இளைபாற!
கண்ணுக்கு எட்டிய
தூரம் வரை
ஒன்றுகூட காணவில்லை!
கிடைத்த செடி நிழலில்
சற்றே ஓய்வெடுத்தேன்!
கூட பறந்து வந்த காதலியை
செடி நிழலில்
கூடி வாழலாம்
என்று ஆசையாய்
அழைத்தேன்!
“யாரும் பார்க்கா வண்ணம்
உயரமான மரக்கிளையில்
இலைகள் மறைத்திடவே
கூடி மகிழ்வதே இன்பம்!
அப்படி
கொஞ்சி குலாவிடத்தான் ஆசை!
சன்னல் விளிம்பினிலே
தொங்கும் செடி நடுவே
பயந்து பயந்து
காதல் மொழி பேச
எனக்கு சற்றும் விருப்பமில்லை!
என் கனவு கூடு கட்ட
இந்த செடி போதாது !
நாம் மகிழ்ந்து உறவாட
இந்த இடம் பத்தாது”என்றாள்!
“கூடி வாழ மனம் இருந்தால்
செடி நிழலும் சொர்கமடி”என்றேன்!
“நீயும் நானும் வேண்டுமானால்
செடி நிழலில் வாழ்ந்திடலாம்!
பின்னாளில் என்
குஞ்சுகளுடன்
கொஞ்சி விளையாட,
உண்டு மகிழ்ந்திட,
இன்பமாய் தூங்கிட,
இந்த இடம் போதாது “
என்றே சொல்லி
சொர்க்கம் காண மறுத்து
பறந்தே போய் விட்டாள்!
தனியாய் தவிக்கின்றேன்
துடியாய் துடிக்கின்றேன்!
உங்கள் குடி பெருக்க
உம் மக்கள் சுகமாய் வாழ
மரம் வெட்டி
காடு அழித்து
வீடுகட்டி விட்டீர்கள்!
மரம் இன்றி எங்கள் காதல் வாழ்வதெப்படி?
எங்கள் குலம்
தழைப்பதெப்படி?
வாழத்தான் ஆசைபடுகிறோம்
வழிதான் தெரியவில்லை!!
வழியேதும் தெரிந்திருந்தால்
உடனே சொல்லுங்கள்!
பறந்து சென்ற காதலியை
அழைத்து வந்து குடிபுகுவேன்!
குடிபுகுந்த சில மாதத்தில்
குருவி குஞ்சு
பேரன் பேத்திகளை
அன்பாய் பரிசளிப்பேன்!

Fit Bit

மூக்கணாங்கயிறு போட முடியலனு இத வாங்கி கட்டிவிட்டாரோ?Fit Bit வாங்கி தரேன் Fit bit வாங்கி தரேனு bitஉ போட்டப்பவே நான் சுதாரிச்சுருக்கனும். நம்மல உத்கார விடாம இருக்கத்தான் இந்த லாடத்த கையில கட்டச் சொல்லி ஆசையாய் வாங்கி தந்தது தெரியாம போச்சு இந்த பயபுள்ளைக்கு! ஆசை வார்த்தைக்கு மயங்கி இப்படி வேலில போற ஓணான புடுச்சு காதுல விட்ட கணக்கா இருக்கு. மாமியார் பக்கத்துல இல்லாத குறையை தீத்துடுச்சு. கொஞ்ச நேரம் அசந்து மசந்து உட்கார்ந்தா உடனே 50 step more 75 steps more அப்படீனு சொல்லி எழுப்பி நடக்க வச்சுருது. எத்தனை நாளைக்கு இதோட பேச்ச கேப்பேனு தெரியல! வர வர மாமியா கழுத போல ஆனாலாம் கதை சீக்கிரமே அரங்கேறும் !!! அப்படி ஆனா அதுக்கு கம்பேனி பொருப்பில்ல...

Sunday, September 8, 2019

எழுந்துவிடு விக்ரமா!

எழுந்துவிடு விக்ரமா!
அந்த ஆதித்யன்
நிழல் படாத இடத்தின்
ரகசியம் அறிய
விக்ரமாதித்தியனாய்
சிவன் அருளாலே
உன்னை அனுப்பி வைத்தோம்!
சுகமாய் நீ புலம் பெயற
கவனமாய் மறுவீடு
அனுப்பி வைத்தோம்!
நீண்ட தூர பயண களைப்பில்
நீ வீடுபேறு அடையும் முன்னர்
சற்றே உறங்கி விட்டாய்!
உன் உறக்கம் கேட்ட உடன்
கோடி கண்கள் ஒளி இழந்ததடா!
உன்னை ஆண்டு பல சுமந்து
கவனமாய் பெற்றெடுத்த
பெற்றோரும்
நீறு பூத்த நெருப்பாய்
கண்ணீர் வடிக்கின்றார்!
ஆண்டுகள் பதினாங்கு
காட்டில் வாழ்ந்த ராமனே
நாடு திரும்பி வந்துவிட்டான்!
பதினாங்கே நாட்கள் தான்
உன்னை நாங்கள்
சந்திர மண்டலத்திற்கு
ஆசையாய் அனுப்பி வைத்தோம்!
கோபிக்காமல் சீக்கிரமே
எழுந்துவிடு விக்ரமா!
தந்திரமாய் சென்ற வேலை முடித்துவிடு!
இருட்டை கண்டு பயம் கொள்ளாதே!
அந்த கருப்பு வெறும் நிறமே!
நீ ஒளிந்து விளையாடியது போதும்
ஒளி கொண்டு எழுந்துவிடு!
நீ பார்க்கும் காட்சிதனை
ஓயாமல் அனுப்பிவிடு!
சுகமாய் நீ அங்கு இருக்கின்றாய்
என்று படம் மூலம் சொல்லி விடு!
உன் ஒருவன் உயிர் நாடியில்
ஒரு தேசமே உயிர்த்தெழுமே!

Saturday, August 31, 2019

ஞாயிறு ஞானோதயம்:

ஞாயிறு ஞானோதயம்:
தமிழ் மொழி மட்டும் தான் தாயாய் உருமாறுகிறதா? அதனால் தான் நமது பெயர்களில் கூட தமிழ்மகன்,தமிழ்குமரன், தமிழ்ச்செல்வன்,தமிழ்செல்வி, , , என்றெல்லாம் பெயர்கள் இருக்கிறதா? ஹிந்தி பேட்டா, ஹிந்திபேட்டி, மலையாளகுட்டி, மலையாளமோலே, மலையாள மகன், தெலுங்குகுமார்டே, தெலுங்குகுமாருடு, ]English girl, Italian damsel என்றெல்லாமும் இருக்கிறதா???? ஆம் “ தமிழ்” தாய் தான்.......

சனி கிழமை வெட்டி:::::ஒரு உம்ம தெரிஞ்சாகனும்!
நக போட்டு கல்யாணம் செய்யனு சரி !அது எதுக்கு நகயோட நட்டும் போடனுனு கேக்கறாய்ங்க?கல்யாணத்துக்கு அப்புறமா நட்டு கலண்டுடுச்சுனா என்ன செய்யறதுனு முன் ஜாக்கறதயா கேக்கறாய்ங்களோ??🤔🤔

கந்தல் ஆனாலும்

கந்தல் ஆனாலும் 
கசக்கிக் கட்டு
சாயம் ஏற்றப்பட்ட 
துணிகளை மட்டும் அல்ல
சாயம் பூசப்பட்ட
மனங்களையும் தான்.....

Flown away!

Flown away! 
The chirping birdie left the nest!
The flapping of wings is not to be heard!
The small, little, sharp beak 
no more to rub mama 's shoulder!
The food on the plate goes stale
without anyone to peck!
The little birdie has flown away
To nestle in a different nest,
Believing in the strength of its own wings!
No more does it need
the warmth of mama's feathers!
No more does it want to see
the world with mama's bird eye view!
Whilst the view of mama is fading
The scene that it sees seems to be a different one!
Mama is happy seeing her baby flying
But with the longing for the home coming!
The nest now seems to be just
interwining dried twigs and dried leaves,
It is not a home to sleep in peace!
The season changed
The tree is nude with no leaves to hide.
Still mama bird sits in the nest
with open wings waiting to
cuddle her once flown baby bird!
Time will fly!
The green leaves will cover the tree again!
The flowers will bloom
The fragrance will fill the air!
Welcoming sign for the baby to come again!
The baby shall come back .
The interwined twigs and dried leaves
will once again become a
Nest to nestle and cuddle!
The chirping music will play again
The small, little , sharp beak
will rub her shoulders once again......

தூக்கனாங் குருவியின் கூடு.

மாளிகை வீட்டு
வரவேற்பறையில் 
அழகான
தோரணமாய்
தொங்குகிறது,
தன் கூட்டிலிருந்து
விரட்டி அடிக்கப்பட்ட
தூக்கனாங் குருவியின்
கூடு....

அத்தி வரதா....

அத்தி வரதா....
சிறு வயதில் சுதந்திர தினம்
அணிவகுப்பை நேரில் சென்று பார்க்க ஆசையாக இருக்கும். நாம் எங்கே டெல்லிக்கு போவது பார்ப்பது.மறுநாள் நாளிதழை திறந்து வைத்துக்கொண்டு படங்களை பார்த்து ரசிப்பதுண்டு. பின் தொலைகாட்சி பெட்டி வாங்கியவுடன் “ஆஹா நேரில் சென்று பார்த்தால் கூட இப்படி தெளிவாக பார்க்க முடியாது போல இருக்கிறதே” என்று தோன்ற ஆரம்பித்தது. இதைப் போலத்தான் யார் இறந்தாலும், எந்த விழா விளையாட்டு போட்டி ஆனாலும் தொலைகாட்சி முன் பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி உட்கார்ந்து பார்ப்பதாகி விட்டது. இதே தான் அத்தி வரதரைப் பார்க்க வேண்டும் என்று தோன்றிய போதும் தோன்றியது. அங்கம் அங்கமாக ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் அழகாக கைதொலைப்பேசியிலேயே பார்க்க முடிகிறபொழுது எதற்கு இப்படி கூட்டத்தில் அடிபட்டு மிதிபட்டு பார்க்க வேண்டும் என்று தோன்றி விட்டது. கைபேசியில் ஜூம் செய்து மிக அருகில் பார்ப்பதை போன்று 3D எஃபெக்ட்டில் பார்க்க முடிகிறது. வரதரே இந்த கூட்டத்தை கண்டு மூச்சு முட்டுவார் போல. இவ்வளவு மனிதர்களையா நாம் படைத்தோம் என்று அவருக்கே சந்தேகம் வரும் அளவிற்கு நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக கூட்டம் அலை மோதுகிறது. அத்தி வரதரையே மனிதர்கள் வெளியிடும் கார்பண்டையாக்ஸ்சைட் வாயும் சுற்றுச்சூழலில் கலந்திருக்கும் துற்நாற்றமும் தாக்கி அவர் இதற்கு மேல் இந்த பூவுலகில் இருந்தால் நமக்கு ஆஸ்த்துமா வந்துவிடும்.
இனி தண்ணீருக்குள் ஓய்வு எடுப்பதே மேல் என்று ஓடி விடுவார் போல......அத்திப்பூ போல வராத வரதர் வந்திருக்கிறார் . ஏண்டா வந்தோம் என்பதை போன்று அவருக்கு தோன்றவிடாமல் கொஞ்சம் அவரை சந்தோஷமாக வைத்திருக்கலாம் போல... விருந்தும் மருந்தும் மூன்று நாள் தான் என்பது சரிதான்.தண்ணீரை விட்டு வந்தவுடன் படுக்க வைத்து ஓய்வெடுக்க வைத்தார்கள். பின் சில நாட்கள் கழித்து எழுந்து கால் கடுக்க நிற்க வைத்து விட்டார்கள். உன்னை பார்க்க வரும் நாங்கள் கால் கடுக்க நின்று தரிசனத்திற்கு காத்துக் கிடக்கும் பொழுது நீ மட்டும் ஒய்யாரமாய் படுத்திக் கொண்டு காட்சி அளிக்கலாமா என்பதை போல
உள்ளது. எது எப்படியோ வரதர் என் கைதொலைபேசியில் தினமும் எனக்கு அழகாக காட்சி அளிக்கிறார். கோவிந்தா கோவிந்தா🙏🙏

இயற்கை அன்னை

இயற்கை அன்னை
அள்ளி அள்ளித் தான் கொடுக்கிறாள்
அவள் பொய்ப்பதில்லை!
பொன்னும் பொருளும்
சேமிக்க தெரிந்த நமக்கு
அவள் கொட்டி கொடுக்கும்
தண்ணீரை சேமிக்க தெரியவில்லை!!
உறவானாலும், உடமையானாலும்
இழந்தப் பின்னே
அருமை அறிந்து
பழகிப்போன நமக்கு
தண்ணீரின் அருமையும்
அப்படியே!!!!

Mom and Rishi

Mom and Rishi
Rishi: Mama , did you write something like "Mom and Sruthi" when Sruthi was young?
Mom:No Rishi
Rishi: Why didn't you write?
Mom:Because I didn't know that I could write like this
Rishi:Thank God you didn't know. Otherwise she would have killed you unlike me.
Mom:But these days you don't talk to me much . So I don't have much to record.
Rishi:Thats because these days I think before I talk and also I don't want to give you any content for your writings.
The big boss show suddenly came into mom's mind when Rishi talked about not giving content. She can't evict her son like in Big boss if he is not going to give her content.
Mom: Why is this sudden change of behaviour?
Rishi:That's the sign of maturing mama
Mom: What maturing?
Rishi: To think before you talk
Mom: Ok the maturity is only in talking not in keeping your room clean or your things organised. When is that part of yours going to mature?
Rishi:You can't mature as a whole person overnight mama. Different skills take different time for maturity.
Mom went into her Zen mode. She felt happy that her son was evolving into a matured person. If only we adults could practice the "think before you speak" mantra from childhood we would be better in dealing with relationships. All said and done the mother in her wanted her baby to be the baby for ever. Poor Rishi doesn't know that when it comes to content for her write up his mom can draw a line if he just puts a dot , .........

காலையில் வந்த call...

காலையில் வந்த call......
காலங்காத்தால நெருங்கிய தோழியிடம் இருந்து call வந்தவுடன் அலறி அடித்துக்கொண்டு கைப்பேசியை எடுத்துப் பேசினேன்.
தோழி கேட்டாள்”ஏய் இன்றைக்கு பெளர்ணமியாச்சே உடனே நீ எதையாவது எழுதறேனு கி(குழ)ளம்புவியே அதான் காலைலேயே சுதந்திர தின வாழ்த்து சொல்லலானு கூப்டேன்” என்றாள்.
என் mind voice சொன்னது” கீதா நல்ல வேளை நீ எதையோ எழுதுவனு சொன்னா கிறுக்குவனு சொல்லல. free ஆ விடு. போற போக்க பாத்தா free ஆ ticket அனுப்பி பெளர்ணமிக்கு பெளர்ணமி ஏர்வாடிக்கு அனுப்ப பல பேர் ரூம் போட்டு யோசிக்கறாங்க போல. சுயமா சிந்திகறத கூட சுதந்திரமா எழுத முடியாத போது சுதந்திர தின வாழ்த்துக்கள் எதுக்கு?????”
கொஞ்சம் நேரம் கழித்து எழுத்துச்சுதந்திரம் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.இப்பொழுது இருக்கும் கால கட்டத்தில் நாம் நம்முடைய எழுத்து சுதந்திரத்தை எப்படி எல்லாம் தவறாக பயன் படுத்துகிறோம்? எதை வேண்டுமானாலும் எழுதுகிறோம். அதில் உண்மை இருக்க வேண்டும் என்பதில்லை. அடுத்தவர் புண்படுவார் என்று நினைப்பதில்லை. அழகான மொழி விடுத்து எப்படி வேண்டுமானாலும் வக்கிரமாக ஆபாசமாக எழுதலாம் என்றாகி விட்டது.எழுத்து என்பது நம் உணர்வை மட்டும் அல்ல நாம் யார் , எப்படி பட்டவர், நம் குணாதிசயங்களையும், நம் சிந்தனையையும் வெளிக்கொணரும் ஒரு கருவி. இதை மனித குல முன்னேற்றத்திற்காகவும் , சமுதாய நல்லினக்கத்திற்காகவும், மக்களின் ரசனையை மேம்படுத்தவும் , ஒரு உயரிய சிந்தனையில் பயன் படுத்துதல் அவசியம். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று வாழ்வதை விட இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்வதே நாம் சுதந்திரம் பெற்றதற்கான உண்மையான அர்த்தம். இதனை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து நாம் பேசுவதற்கு முன் யோசித்து அதற்கு ஒலிவடிவம் கொடுப்பது எப்படி நல்லதோ அப்படியே நம் சிந்தனைகளுக்கு எழுத்து வடிவம் கொடுக்கும் முன் , சிற்பி ஒருவன் தேவை இல்லாத கற்களை செதுக்கி அழகிய சிற்பத்தை செதுக்குகிறானோ அப்படி எழுத்துச் சிற்பத்தை செய்ய முற்பட வேண்டும்.
இந்த சுதந்திர தின நன்னாளில் நாம் ஒவ்வொருவரும் எழுத்துச் சுதந்திரத்தை பயனுள்ளதாக பயன்படுத்த என் வாழ்த்துக்கள்💐💐

சாதா vs ஸ்பைசி ஆம்லெட்

சாதா vs ஸ்பைசி ஆம்லெட்
ஒரு வெங்காய ஆம்லெட் போட்டு எடுத்துட்டு வா--இது ஒரு ரகம்
நல்லா சின்ன வெங்காயத்த நைசா , பொடிசா நறுக்கி, அதுல கொஞ்சம் பச்ச மொளகாய பொடிசா, பல்லுல படாதமாதிரி நறுக்கி போட்டு, கொஞ்சமா மஞ்சதூள், கொஞ்ச தூக்கலா மெளகு பொடி, பொடியா நறுக்கன கொத்தமல்லி சேத்து, அளவா டேபிள் சால்ட் சேத்து, நல்லா பெசஞ்சி அப்புறமா தனியா அடிச்சு வச்சுருக்க ரெண்டு முட்டய , அதுல சேத்து, ஒரு டேபிள் ஸ்பூன் பால் சேத்து வேகமா எல்லாத்தையும் அடிச்சு, சூடான தோச கல்லுல, ஊத்தி, சுத்திவர கொஞ்ச நெய் ஊத்தி மெதமான சூட்ல வேக வச்சு, லைட்டா திருப்பி போட்டு ஒடனே எடுத்து ஒரு ஸ்பெஷல் ஆம்லெட்ட தட்ல வச்சு வேகமா எடுத்துட்டு ஓடி வா பாக்கலாம்........... இது ஒரு ரகம்
வாழ்க்கையும் இப்படித்தான். ருசியை கூட்டுவதும் , குறைப்பதும் நம் கையில் தான் இருக்கிறது......இல்லை இல்லை, வார்த்தை ஜாலத்திலும் தான் அது பொதிந்து இருக்கிறது....வார்த்தைகளின் மாய விளையாட்டிற்கு நாம் சில நேரம் அல்ல பல நேரம் மயங்கித் தான் போய் விடுகிறோம். ஒருவரது வார்த்தை விளையாட்டு மற்றவரின் பலவீனமாகவும் பலமாகவும் , தூண்டு கோலாகவும், துணையாகவும், அரவணைப்பாகவும்,பழியாகவும், எப்படியும் மாறலாம் சூழ்நிலைக்கேற்றபடி. ஜாக்கிரதையாகத் தான் விளையாட வேண்டி இருக்கிறது வார்த்தை விளையாட்டை.......விளையாட பயந்து மெளனியாக போனால் வாழ்க்கை ருசிக்காது. சாதா ஆம்லெட் ஆகிவிடும். நமக்கு தேவை ஸ்பைசி ஆம்லெட்... ருசித்துத் தான் பார்ப்போமே......வாய் இருக்கற புள்ளைக்கு கிடைக்குமாம் ருசியான ,ஸ்பைசி ஆம்லெட்....இந்த வித்தை எப்படி பட்டது என்றால், காலை உணவிற்கு பழங்கஞ்சி என்று சொல்வதற்கும், I have fermented day old rice , rich in anti oxidants and probiotics என்பதற்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தைப் போன்றது....

அமேசான் காடும் முதிர் கன்னியும்!

அமேசான் காடும் முதிர் கன்னியும்!
”அமேசான் காடே”
முதிர் கன்னியாம்
நானும் நீயும் இன்று
ஒரே கோட்டில்
நிற்கின்றோம்!
உன்னை தீயும் தீண்டியதே
என்னை விரகத் தீயும் (வசவுத்தீயும்)தழுவியதே!
உன்னை அணைக்க ஆளில்லை
என்னை அணைத்திட கரம் இல்லை!
நீ பற்றி எரிவது யாராலோ?
என் உணர்வும் எரிவது பலராலோ?
நம் இருவரின் தவறு இங்கேதுமில்லை!
உன்னை ஒற்றை குச்சியில் பற்ற வைத்தான்!
என் வாழ்வை ஒற்றை சொல்லால் தீவைத்தான்!
நம் நிலையை பார்த்து பலரும் பதை பதைப்பர்
அருகில் வரவே பயந்திடுவர்!
இறைவன் நம்மை படைத்தான் வாழ்வதற்கே
வாழ விடுவார் தான் இங்கு எவருமில்லை!
உன்னை சாந்தப்படுத்த தண்ணீரும்
என்னை அமைதி படுத்த கண்ணீரும்
தேடி தேடி அலைகின்றோம்!
வாழும் வரை போராட்டம்
வீழ்ந்த பின் தேரோட்டம்!
தீயும் நம்மை விழுங்கிடினும்,
கருஞ்சாம்பலாகிடினும்
மீண்டெழுவோம்
இளம் தளிராய்
மீண்டும் ஒரு நாள்
ஒளிர் பெருவோம்!

காலை காட்சி:

காலை காட்சி:
நேற்றைய இரவு காட்சி "Article 15" ஹிந்தி படம் பார்த்த பாதிப்பிலிருந்து நீங்காமல் , சனிக்கிழமை என்றும் பாராமல் காலை சீக்கிரமாகவே எழுந்தாகிவிட்டது. இங்குதான் எழுந்தவுடன் வாசல் தெளிக்க வேண்டும், கோலம் போடவேண்டும், பால் காய்ச்ச வேண்டும் என்ற கோட்பாடுகள் இல்லையே! என்ன செய்வது என்று தெரியாமல் நடை பயிற்சிக்கு கிளம்பி விட்டேன். அந்த காலை பொழுதில் பார்த்த காலை காட்சிகள் சில:
காட்சி 1: ஒரு கணவன் , மனைவி, குழந்தை. குழந்தைக்கு ஒரு வயது அல்லது ஒன்றரை வயது இருக்கும். strollerரில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது. மனைவி strollerஅய் தள்ளிக்கொண்டு வந்தார். கணவர், தூக்க முடியாத மாதிரி ஒரு back pack பையை முதுகில் மாட்டிக்கொண்டு வேக வேகமாக கூடவே நடந்து வந்தார். பேருந்து நிறுத்துமிடம் நோக்கி நடந்து கொண்டிருந்தனர் . கணவர் மனைவியிடம்,”அந்த stroller sideல இந்த துணிய வச்சுக்கோயேன். அதுல தான் ஒன்னும் இல்லல,” என்றார். அவர் நல்ல உயரம். அதற்கேற்ற உடல்வாகு. அவரை பார்த்தால் ஒரு backpack தூக்க தயங்குபவர் போல தெரியவில்லை. ஆனால் ஏனோ அந்த துணிகள் அவருக்கு கூடுதல் சுமையாக தோன்றியது போல. உடனே அவரின் மனைவி ,”அதெல்லாம் strollerல வைக்க முடியாது,நீங்களே பையில வச்சு தூக்கிட்டு வாங்க. இத கூடவா தூக்க முடியாது? பாப்பா stroller ல கண்டத வைக்க முடியாது!”என்று திட்ட வட்டமாக மறுத்துவிட்டார். அந்த காட்சியை பார்த்த பொழுது பரபரப்பு மிக்க இந்த வாழ்க்கையில் உழலுவதால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் அந்த மனைவி ,”இன்றைக்கு ஒரு நாளாவது எங்களுக்காக எதையாவது தூக்கிட்டு வா. வாரம் முழுக்க நான் தானே வீட்ட கவனிச்சுகறேன். புள்ளயதான் தூக்க மாட்ற அதோட துணிமணியனாச்சும் தூக்கி சும”என்று சப்தமில்லாமல் மனதிற்குள் முனுமுனுப்பது கேட்பது போல் இருந்தது. அவர்களை கடந்து நான் சென்ற பொழுது கண்கள் என் அனுமதி இன்றி அந்த strollerஅய் பார்த்தது. கண்டதை வைக்க முடியாத அந்த stroller ரில் மனைவியின் கர்ப்பிணி பை தொங்கி கொண்டே ஆடி ஆடி அவர்களுடன் போனது.............கணவரோ அந்த backpackகோடு விருக் விருக் என்று வேகமாக கோபத்தை அடக்கியபடி நடந்து சென்றார்.இதை எதையும் பற்றியும் புரியாத குழந்தை கையிலிருந்த கைதொலைப்பேசியில் எதையோ பார்த்துக் கொண்டு சிரித்த படி strollerரில் சென்றது.......
காட்சி 2: இரு பெண்மனிகள் தங்களின் எஜமானரின் நாய்களை நடைப்பயிற்சிக்கென அழைத்துக் கொண்டு சென்றனர். வேறு வேறு வீட்டு நாய்களாக இருக்க வேண்டும். காலை வேலையில் தங்களுக்கென நேரம் கிடைத்த சந்தோஷத்தில் இரு பெண்களும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அனேகமாக அவர்களின் உணர்வுகளின் பறிமாற்றமாக தோன்றியது. தன் குடும்பம் குட்டி யாவரையும் விட்டு விட்டு கடல் கடந்து எங்கோ ஒரு நாட்டில் பிழைப்பிற்காக வந்திருந்த இருவரும் தங்களின் சந்தோஷங்களையும், சோகங்களையும் கொட்டி தீர்க்க அந்த சந்தர்பத்தை உபயோக படுத்திக்கொண்டிருந்தனர். இருவரும் கைகளில் தத்தம் நாயின் கயிற்றை இருக பிடித்து இருந்தனர்.நாய்களுக்குள்ளும் ஒரு புரிதல் இருந்தது. அடிக்கடி சந்தித்திருக்க வேண்டும் போல் தோன்றியது. ஒன்று பெண் நாய். மற்றொன்று ஆண் நாய். இரு நாய்களும் அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டன . மூக்கோடு மூக்கு வைத்து தேய்த்து கொண்டன . கால்களால் ஒருவரை ஒருவர் வருடிக்கொண்டன . அவைகளின்் காதல் சம்பாஷனை சப்தமில்லாமல் அரங்கேறிக்கொண்டு இருந்தது. திடீரென்று பெண் நாய் லொள் என்று சத்தமாக குரைத்தது. உடனே ஆண் நாய் அந்த குரைப்பின் அர்த்தம் உணர்ந்து உடனே பின் வாங்கி நகர்ந்து சென்றது.நாய்களை பிடித்திருந்த பெண்கள் இருவருக்கும் தூக்கி வாரி போட்டது. தத்தம் நாயை இருக பிடித்து இழுத்து கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டனர். சிறிது நேரம் இரு நாய்களும் வால்களை ஆட்டிக்கொண்டு கண்களால் சமாதானம் அடைந்து அவரவர் வழியில் சென்றன. நாய் என்றாலும் NO என்று பெண் நாய் சொன்னால் அது NO தான். அதனை ஆண் நாய் புரிந்து ஒதுங்கிக் கொண்டால் அங்கே அழகான ஒரு புரிதலும் புரிதலுக்கு பின் ஒரு உறவும் மலர வாய்ப்பிருக்கிறது.
காட்சி 3:போகும் வழி நெடுகிலும் அழகான உயரமான, பச்சை பசேலென்ற மரங்கள் இருக்கும். அவைத் தான் பல விதமான பறவைகளின் வீடுகள் . இன்று மரங்களின் கிளைகள் எல்லாம் வெட்டப்பட்டு வெறுச்சோடி இருந்தது. தாய் மரம் தனிமையில் இருப்பது போல இருந்தது. கிளைகள் சில நேரங்களில் சுமை தான் . ஆனால் தாய் மரத்திலிருந்து வெட்டப்பட்ட கிளைகள் கீழே வாடி வதங்கி கிடந்தது மனித குழந்தைகளைப்போல்.
காட்சி 4: நடைப் பயிற்சி முடிந்து களைத்துப் போய் கொஞ்சம் நேரம் அமைதியாக அமர்ந்திருக்கலாம் என்று நீச்சல் குளத்தருகே அமர்ந்திருந்தேன். அடுக்குமாடி குடியிருப்பு என்பதால் காலையிலேயே புல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்ச ஆட்கள் வந்திடுவார்கள். கடந்த ஒரு மாதமாக இருப்பது போதும் என்று இல்லாமம் கடனுக்கு வாங்கி வெப்பத்தை கக்கும் சூரியனால் பச்சையாக இருக்க வேண்டிய புல் எல்லாம் காய்ந்த சருகாய் காட்சி அளித்தது. பச்சை நிறம் தண்ணீர் பாய்ச்சியவரின் சீருடையில் மட்டுமே இருந்தது. அவர் தண்ணீர் பாய்ச்சும் குழாயை , பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு போல் தன் தோளில் போட்டுக்கொண்டு தண்ணீரை அளவாகவும் அழகாகவும் பாய்ச்சிக்கொண்டிருந்தார். அவரின் முகத்தில் ஓர் கர்வம்,”இந்த புற்கள் உயிர் வாழ்வது என்னால் தான். நான் தான் இவற்றிற்கு தண்ணீர் பாய்ச்சுகிறேன்,”என்று. புற்களின் மேல் தூரளாக விழுந்த தண்ணீருக்கும் ஓர் கர்வம்,”நான் புற்களின் மேல் விழுவதால் தான் அவை உயிர் பிழைக்கின்றன,”என்று. அவரவர் கர்வம் அவரவர் தலையில் என்று நினைத்துக் கொண்டு என் தலையில் விழுந்த சூரிய ஒளியை இதமாக அனுபவித்த படி அமர்ந்திருந்தேன்.
காட்சி 5: நான் அமர்ந்திருந்த மேசைக்கு எதிர் திசையில் மூன்று முதியோர்கள் அமர்ந்திருந்தனர். வேற்று மொழி பேசுபவர்கள். அறுபத்தி ஐந்து வயதிலிருந்து எழுபது வயதிற்குள் இருப்பார்கள். மூவரும் நடை பயிற்சி முடித்து விட்டு அங்கு உட்கார்ந்து கொண்டு போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு எண்பது வயது கிழவி இரு பைகளை தூக்கி கொண்டு என்னை கடந்து சென்றார். நேர்த்தியாக உடை அணிந்திருந்தார். பைகள் கைப்பை அளவுதான். பெரிதான பைகள் இல்லை. தோளில் தொங்கவிட்டு இருந்தார். சற்று கூன் போட்ட படி அந்த வயதிற்கேற்ற முன் எச்சரிக்கையுடன் மெதுவாக நடந்து சென்றார். இதை கவனித்த அந்த மூன்று பெண்மணிகளின் கண்களும் ஒரு நிமிடம் அந்த கிழவி நடந்து சென்ற திசையிலேயே சென்றது. அவர்களுக்கு அந்த கிழவி பரிச்சயமானவரா அல்லது பரிச்சயம் இல்லாதவரா என்று எனக்கு தெரியாது. அவரை பார்த்து அளந்த ஒரு நிமிடத்தில் ஒரே நேரத்தில் மூன்று பேரின் உதடுகளும் ஏதோ இடைவிடாது பேசியது. யார் பேச்சை யார் கேட்கிறார்கள் என்று எனக்கு குழப்பமாகி போனது. அவர்களின் மொழி வேறு எனக்கு புரியாத ஒன்று. எனவே அவர்களின் உதடசைவை வைத்து நான் ஒன்றும் கணிக்க முடியவில்லை. அந்த கிழவியை அவர்கள் போற்றுகிறார்களா அல்லது தூற்றுகிறார்களா அல்லது சாதாரனமாக ஏதோ பேசி கொள்கிறார்களா என்று விளங்கவில்லை.அவர்கள் ஒன்றும் நம் பிக்பாஸோ அல்லது நம் தொலைக்காட்சியில் வரும் டாக் ஷோவோ பார்க்க வாய்ப்பில்லையே. பின் எப்படி இப்படி எல்லோரும் ஒரே நேரத்தில் பேசுகிறார்கள். ஒவ்வொருவரும் தான் பேசத்தான் ஆசை படுகிறார்கள். பிறர் பேசி தான் கேட்க யாருக்கும் ஆசை இருப்பதில்லை போல. அது எல்லா நாட்டவருக்கும் பொதுவான விஷயம் தான் போல. நடப்பவையை தான் நிழற் உலகத்தில் காண்பிக்கிறார்கள் . ஓரிரு நிமிடங்களுக்குப் பின் அந்த மூன்று வயதான பெண்மணிகளும் தங்களின் உதடுகளுக்கு பூட்டு போட்டு அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.
இத்தனை காட்சிகளை பார்த்து ரசித்து விட்டு என் கையில் கட்டி இருந்த கைகடிகாரத்தை பார்த்தவுடன் தான் ஞாபகத்திற்கு வந்தது,”ஆஹா வீட்டில் இரண்டு பேர் இன்னும் சயனத்திலேயே இருப்பார்களே. நாம் போய் அக்காட்சியை களைத்து மனசாட்சி சொல்லும் சொல் கேட்டு இந்த நாளை துவங்கவேண்டுமே “என்று..
இத்துடன் காலை காட்சிகள் முடிவிற்கு வந்தது........
  
Monday, July 15, 2019

பிறந்த பயன்......

பிறந்த பயன்......
வார இறுதியாய் இருக்கிறதே ஒரு நாள் சமையலுக்கு விடுமுறை கொடுத்து விடுவோம் என்று நினைத்து சனி இரவு உணவு சாப்பிட வெளியில் சென்றோம். நேரம் ஆகிவிட்டதால் எனக்கு ஒரு தோசை மட்டும் போதும் என்று ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தேன். கணவர் ஏதோ அவர் நாக்கு ருசிக்கேற்ப order செய்தார்.
என் தோசை சீக்கிரமே வந்தது. நான் சாப்பிட தொடங்கி விட்டேன். Order எடுத்த பையன் அருகில் வந்தான். அவனுக்கு ஒரு இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஆறு வயது இருக்கும். கணவரைப் பார்த்து,”அண்ணா , நீங்க ஆம்லெட் கேட்டீங்க. ஆனா வெங்காயம் இல்ல. வேற எதாச்சும் கொண்டு வரவா?” என்று கேட்டான். கணவரும், “சரி first சூப் கொண்டு வா , வேற என்ன வேணுனு அப்புறம் order செய்யறேன்,” என்றார். அதற்குள் நான் என் தோசையை சாப்பிட்டு முடித்து இருந்தேன்.
என் தட்டு காலி ஆனதை பார்த்த அந்த பையன்,”Aunty, உங்களுக்கு ஏதாவது வேணுமா?” என்றான். Aunty என்ற வார்த்தையை கேட்டவுடன் எனக்கு பக்க்க்க்க் என்று நெஞ்சுக்குள் ஒரு வித வலி தோன்றி மறைந்தது. அதனை வெளிக்காட்டாமல்,” இல்லப்பா , எனக்கு போதும்,” என்றேன். அவன் அங்கிருந்து சென்றப் பின்,” ஏங்க, நீங்க மட்டும் அண்ணன், நான் மட்டும் aunty ஆ? என்ன பாத்தா aunty மாதிரியா தெரியுது,நம்மூர்ல ஏன் பொம்பளைங்னா ஒரு வயசுக்கு அப்புறம் aunty அதுவே ஆண்கள்னா எந்த வயசானாலும் அண்ணானு கூப்பிடறாங்க?”என்று கோபமாகவே கேட்டேன். அந்த பையனிடம் என் கோபத்தை காண்பிக்க முடியாதல்லவா!
இதை கேட்ட கணவர் முகமெல்லாம் இன்ப நரம்பு பாய்ந்தோடி முகமே சிவப்பாக மாறியது. எனக்கோ கோபத்தில் முகம் சிவந்தது. அவருக்கு ஒரே சந்தோஷம். “அவன் உண்மையை தானே சொல்லி இருக்கான். நீயெல்லாம் aunty தானே? “என்றார். “அப்போ நீங்க மட்டும் ஏன் அண்ணன்?,”என்றேன். அதற்கு அவர், “ பாக்க aunty மாதிரி இருந்தா அப்படி தான் கூப்பிடுவாங்க. என்ன பாத்தா youngஆ தெரிஞ்சுருக்கு,”என்றார் .
சாப்பிட வந்த இடத்தில் எங்கள் பஞ்சாயத்தை வைத்துக்கொள்வது சரியல்ல என்று நான் அமைதியாக இருந்துவிட்டேன். பின் காரில் போகும் பொழுது இதைப் பற்றி சிந்தித்துக் கொண்டே போனேன். ஏறக்குறைய அந்த பையனின் வயதை ஒத்த என் மகளுடைய நண்பர்கள் aunty என்று கூப்பிடும் பொழுது வராத கோபம், என் தோழிகளின் பிள்ளைகள் என்னை aunty என்று கூப்பிடும் பொழுது வராத கோபம் ஏன் இன்று இப்படி தலை விரித்தாடியது?
யாரோ ஒரு தெரியாத நபர் aunty என்று கூப்பிட்டது பிடிக்கவில்லையா? அப்படி இருக்க வாய்ப்பில்லை. நம்மூரில் பெயர் சொல்லி அழைக்கும் பழக்கம் இல்லை. இந்த பையனும் ஊரில் இருந்து வந்தபடியால் safe ஆக aunty என்று அழைத்திருக்கலாம். ஏன் அக்கா என்று அழைக்கவில்லை? நம்மை பார்த்தால் அவ்வளவு வயதானவளாகவா தெரிகிறது? பலர் நம்மிடம் “உங்களுக்கு வயசே தெரியல.இன்னும் அப்போ பாத்த மாதிரியே இருக்கீங்கனு சொன்னதெல்லாம் பச்சை புளுகா?நமக்கு வயதாவதை ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை? வயதாவதை கண்டு பயப்படுகிறேனா? அல்லது என் கோபத்திற்கான காரணம் இந்த காரணங்கள் எதுவுமே இல்லாமல் என்னை aunty என்று அழைத்த அந்த பையன், கணவரை அண்ணன் என்று அழைத்ததன் விழைவா? என்னை aunty என்று அழைத்து அவமதித்து விட்டதாக எண்ணமா? இல்லை, ஒரு வேளை கணவரை uncle என்று கூப்பிட்டு இருந்தால் one plus one = two ஆகி கணக்கு நேராகி இருக்குமா?
இப்படி பல கேள்விகள் மனதில் எழ அமைதியாக பயணித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் அமைதியின் காரணம் கேட்ட கணவர், “ இந்த பையனை விட இரண்டு வயது அதிகம் உள்ள என் சொந்த கார பையன் ஒருவன் எனக்கு மெயில் அனுப்பினான். அதில் என்னை தாத்தா என்று அழைத்திருந்தான். எனக்கு வந்ததே கோபம்.உன் அப்பா என்னை விட மூத்தவர். நீ எப்படி என்னை தாத்தா என்று அழைக்கலாம்? என்று அவனை கடிந்து கொண்டேன்,I didnt like when he addressed me as தாத்தா ,”என்றார். ஆஹா இப்படி ஒரு கதை இருக்கா என்று நினைத்த எனக்கு இப்பொழுது சந்தோஷத்தில் முகம் சிவந்தது. அதை கேட்டவுடன் என் பிறவி பயனை அடைந்தது போல் இருந்தது. ”தாத்தா மாதிரி இருந்தா தாத்தானு தான் கூப்பிடுவாங்க”என்று பதிலுக்கு பதில், கொடுத்து விட்டு, தாத்தாவை compare பண்ணும் பொழுது aunty பரவாயில்லை என்று எனக்கு நானே ஆறுதல் அடைந்து பயணத்தை இளகிய மனதுடன் தொடர்ந்தேன்....
மனதில் ,Age is just a number ..” என்று யாரோ சொன்னதும், என் நெருங்கிய தோழிகளான வித்யா, சுஜாவுடன் “நாம் இனி நம் வயதை பற்றியோ அதை நினைவு படுத்தும் எந்த ஒரு விஷயத்தை பற்றியோ பேசக்கூடாது ,”என்று செய்து கொண்ட ஒப்பந்தம் நினைவில் வந்து போனது.....பெண்களிடம் வயதை கேட்காதே, ஆணிடம் சம்பளத்தை கேட்காதே என்று கூறுவதெல்லாம் பொய். ஆண்களுக்கும் வயதைப் பற்றி கேட்டால் பிடிப்பதில்லை தான்..... வீட்டுக்கு போனவுடன் மறக்காமல் ஹென்னா கலந்து வைக்கவேண்டும் என்று எனக்கு நானே ஞாயபகப்படுத்திக் கொண்டேன்.......