ஆற்றின் அழுகுரல்!
மணலை
அள்ளி அள்ளி
மலடாக்கி விட்டாய்
எங்களை,
நாங்கள் விடும்
கண்ணீரே இன்று
செந்நீராய்
ஓடுதிங்கே
எங்கள் கண்ணீரில்
உப்பு இல்லையென்றா
கடல் நீரில்
கலக்கவிட்டாய்??
எங்கள் கண்ணீரும்
வற்றிபோகும்
நாள் வெகுதூரம்
இல்லையடா
மானிடா!
இதை உணர்ந்தாவது
எங்களை
மாணபங்கம் படுத்தாமல்
விட்டுவிடடா
மானிடா!!!!
Tuesday, August 28, 2018
Friday, August 17, 2018
விட்டில் பூச்சி
சந்தோஷங்கள்
விட்டில் பூச்சியாய்
சில மணித்துளிகளில்
மறைந்துவிடுகின்றது!
சங்கடங்களோ
சாகும் வரை
புற்றீசல் போல்
பெருகி நம்மை
வாட்டி வதைக்கின்றன......
விட்டில் பூச்சியாய்
சில மணித்துளிகளில்
மறைந்துவிடுகின்றது!
சங்கடங்களோ
சாகும் வரை
புற்றீசல் போல்
பெருகி நம்மை
வாட்டி வதைக்கின்றன......
சுதந்திர விற்பனை......
சுதந்திர விற்பனை......
அடிமையாய்
வாழ்ந்த போதும்
அடக்குமுறையில்
அடிப்பட்ட போதும்
உணரவில்லை!
கையடக்க கருவி
ஒன்று வந்தபின்னே
யாவரின் அந்தரங்கம்
வலைஉலக அரங்கினிலே
அணு அணுவாய்
ஆராயப்பட,
எம் தனிமனித சுதந்திரம்
நித்தம் இங்கே
ஓர் சந்தையில்
விற்பனையாகுதய்யா!!!!!
வாழ்ந்த போதும்
அடக்குமுறையில்
அடிப்பட்ட போதும்
உணரவில்லை!
கையடக்க கருவி
ஒன்று வந்தபின்னே
யாவரின் அந்தரங்கம்
வலைஉலக அரங்கினிலே
அணு அணுவாய்
ஆராயப்பட,
எம் தனிமனித சுதந்திரம்
நித்தம் இங்கே
ஓர் சந்தையில்
விற்பனையாகுதய்யா!!!!!
மழையே!!
மழையே!!
மனித மனதின்
வக்கிரத்தை சுத்தமாக
துடைத்து எடுக்கவா
இப்படி ஆத்திரமாய்
ஆர்பரிக்கிறாய்?
வக்கிரத்தை சுத்தமாக
துடைத்து எடுக்கவா
இப்படி ஆத்திரமாய்
ஆர்பரிக்கிறாய்?
தடம் மாறிய எங்கள்
வாழ்வை
நன்னெறி பிறவாமல் தடுக்கவா
நீ பிரவாகமாகி
வழி மாறி ஆக்ரோஷமாய்
தலைவிரித்தாடுகிறாய்?
வாழ்வை
நன்னெறி பிறவாமல் தடுக்கவா
நீ பிரவாகமாகி
வழி மாறி ஆக்ரோஷமாய்
தலைவிரித்தாடுகிறாய்?
உன்னை வேண்டி
விரும்பியவர்களை
வேரறுத்து வெறுக்கச்
செய்துவிட்டு
நீ ஏன் இப்படி
போகும் திசையறியாது
அல்லாடுகிறாய்????
விரும்பியவர்களை
வேரறுத்து வெறுக்கச்
செய்துவிட்டு
நீ ஏன் இப்படி
போகும் திசையறியாது
அல்லாடுகிறாய்????
படித்த பாடத்தில்
படிப்பினை கற்றோம்.
இனி உன் வழி
நாங்கள் குறிக்கிடமாட்டோம்
அமைதியாய் நீயும்
உன் தாய் மடி சேர்ந்து
கண்ணுறங்கு மழையே!!
படிப்பினை கற்றோம்.
இனி உன் வழி
நாங்கள் குறிக்கிடமாட்டோம்
அமைதியாய் நீயும்
உன் தாய் மடி சேர்ந்து
கண்ணுறங்கு மழையே!!
Sunday, August 12, 2018
கலைஞர் வாழ்த்து மடல்
வள்ளுவனை நாங்கள்
கண் கொண்டு கண்டதில்லை!
நீயே வள்ளுவனாய்
எங்களுக்கு காட்சியளித்தாய்!
வள்ளுவனும் உன்னுருவில்
மறுபிறவி எடுத்தானோ ?
தமிழாண்ட வள்ளுவனுக்கோர்
கோட்டைக் கட்டி
அழகு பார்த்தாய்!
எம்மொழியை செம்மொழி ஆக்கினாய்!
ஊனமுற்றோர் என்ற ஓர்வார்த்தை அகற்றி
மாற்று திறனாளிகளாய்
மறுபிறவியளித்தாய்!
பிறப்பால் எப்பால் என்று குழம்பியவருக்கு
திருநங்கை என்று பெயர் சூட்டி
மதிப்பளித்தாய்!
தமிழ்மொழியும் வள்ளுவனும்
வாழும் நாள் வரை
நீயும் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டே இருப்பாய்!!
கண் கொண்டு கண்டதில்லை!
நீயே வள்ளுவனாய்
எங்களுக்கு காட்சியளித்தாய்!
வள்ளுவனும் உன்னுருவில்
மறுபிறவி எடுத்தானோ ?
தமிழாண்ட வள்ளுவனுக்கோர்
கோட்டைக் கட்டி
அழகு பார்த்தாய்!
எம்மொழியை செம்மொழி ஆக்கினாய்!
ஊனமுற்றோர் என்ற ஓர்வார்த்தை அகற்றி
மாற்று திறனாளிகளாய்
மறுபிறவியளித்தாய்!
பிறப்பால் எப்பால் என்று குழம்பியவருக்கு
திருநங்கை என்று பெயர் சூட்டி
மதிப்பளித்தாய்!
தமிழ்மொழியும் வள்ளுவனும்
வாழும் நாள் வரை
நீயும் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டே இருப்பாய்!!
Friday, August 10, 2018
சிறு அடி!
சிறு அடி!
ஒரு வித்தையை கற்கயில்
நான் ஒர் குழந்தை!
முதல் அடி பயம் கலந்த தடுமாற்றமே!
இரண்டாமடி எடுக்கையில்
விழவும் செய்கிறேன்!
மூன்றாம் அடி எடுக்கையில்
காயப்படுகிறேன்!
நான் ஒர் குழந்தை!
முதல் அடி பயம் கலந்த தடுமாற்றமே!
இரண்டாமடி எடுக்கையில்
விழவும் செய்கிறேன்!
மூன்றாம் அடி எடுக்கையில்
காயப்படுகிறேன்!
என்னை கைப்பிடித்து, தட்டிக்கொடுத்து
அன்பாய் அரவனைத்து
வழிநடத்துவோர் பலர்.
சிலரோ குட்டி குட்டி
எழவிடாமல் கால் இடற செய்கின்றார்.
அன்பு மொழி பேசி ஊக்குவிப்பார் பலர்.
செம்மொழியாம் எம்மொழியில்
தேடித் தேடி அலைந்து
தீஞ்சொற்கள் சில பொருக்கி
வீசி எறிந்து சுடப்பார்ப்பார் சிலர்.
என் அடி வலி அறியாதார்
அன்பாய் அரவனைத்து
வழிநடத்துவோர் பலர்.
சிலரோ குட்டி குட்டி
எழவிடாமல் கால் இடற செய்கின்றார்.
அன்பு மொழி பேசி ஊக்குவிப்பார் பலர்.
செம்மொழியாம் எம்மொழியில்
தேடித் தேடி அலைந்து
தீஞ்சொற்கள் சில பொருக்கி
வீசி எறிந்து சுடப்பார்ப்பார் சிலர்.
என் அடி வலி அறியாதார்
எள்ளி நகையாடுகின்றார்!
அதை தூக்கி எறிந்துவிட்டு
என்வழி நான் நடக்கின்றேன்!
நான் ஒரே இடத்தில் நின்றுவிட்டால்
பாசிபடர்ந்த குட்டைநீர் ஆவேன்.
மலையையும், காட்டையும் தாண்டி
கற்களிலும், முற்களிலும் உரசி
ஓடிக்கொண்டே இருந்தால்
தெளிந்த ஆறாவேன்!
நான் கடல் சேறும் ஆற்று நீர்!
என்றைக்காவது ஓர் நாள்
அப்பெரும் கடல் சேறுவேன்.
பாசிபடர்ந்த குட்டைநீர் ஆவேன்.
மலையையும், காட்டையும் தாண்டி
கற்களிலும், முற்களிலும் உரசி
ஓடிக்கொண்டே இருந்தால்
தெளிந்த ஆறாவேன்!
நான் கடல் சேறும் ஆற்று நீர்!
என்றைக்காவது ஓர் நாள்
அப்பெரும் கடல் சேறுவேன்.
என் ஓட்டம் மெதுவாக இருக்கலாம்
ஆனால் அதன் உயிரோட்டம் நின்றுவிடாது!
நான் இடறி விழுகையில்
கரம் நீட்டி தூக்கும்
தாய் மடி சேர்வேனேத் தவிர
முகமூடி அணிந்து
உலாவரும் பேயிடம்
தஞ்சம் புகமாட்டேன்!
ஆனால் அதன் உயிரோட்டம் நின்றுவிடாது!
நான் இடறி விழுகையில்
கரம் நீட்டி தூக்கும்
தாய் மடி சேர்வேனேத் தவிர
முகமூடி அணிந்து
உலாவரும் பேயிடம்
தஞ்சம் புகமாட்டேன்!
கால் ஆட்டி தூங்காவிட்டால்
சவமென்று குழிசேர்க்கும்
மாந்தர் தம் மத்தியிலே
மனிதம் தேடுவது மடமை!
பயம் என்று இல்லையெனில்
இடர் என்பதும் மறைந்தே போகும்!
சவமென்று குழிசேர்க்கும்
மாந்தர் தம் மத்தியிலே
மனிதம் தேடுவது மடமை!
பயம் என்று இல்லையெனில்
இடர் என்பதும் மறைந்தே போகும்!
நான் ஒன்றும்
தடம்பதிக்க விரும்பவில்லை,
தடமாக ஆசையில்லை!
எத்துனை முறை
விழுந்தாலும் வீழ்ந்தாலும்
ஓய்வெடுக்க மனமில்லை!
தடம்பதிக்க விரும்பவில்லை,
தடமாக ஆசையில்லை!
எத்துனை முறை
விழுந்தாலும் வீழ்ந்தாலும்
ஓய்வெடுக்க மனமில்லை!
வாழும் நாள் வரை
சிறு அடி
எடுத்து வைத்துக்கொண்டே இருப்பேன்
வாழ்தலின் நினைவாக!!
சிறு அடி
எடுத்து வைத்துக்கொண்டே இருப்பேன்
வாழ்தலின் நினைவாக!!
Subscribe to:
Posts (Atom)