Saturday, October 17, 2015

ஏற்றமெனில்.....!!!!

கோப்பைகள் வேண்டாம்,
வண்ணப் பட்டு சால்வைகள் வேண்டாம்,
மெடல்கள் வேண்டாம்,
பாராட்டு மழை பொழியவும் வேண்டாம்,
பத்திரமும் வேண்டாம்,
காசோலையும் வேண்டாம்
காகித பணமும் வேண்டாம்!!

என் சிறிய செயலுக்கு,
நான் சமைக்கும் உணவிற்கு,
நான் பாடும் பாட்டிற்கு,
நான் கிறுக்கும் கவிதைக்கு,
நான் தீட்டும் ஓவியத்திற்கு,
நான் உடுத்தும் உடைக்கு,
என் குழந்தை வளர்ப்பிற்கு,
நம் இல்லம் கோவிலாய்
இருப்பதற்கு,


 சிறு அங்கீகாரமே எனக்கு
பெரும் விருது,
அது இல்லையேல்
நான் வெறும் எருது...

ஒரு சிரிப்பு,
ஒரு அணைப்பு,
ஒரு சொல்,
கண்களில் ஆச்சரியக் ஒளி,
வாய் மொழியில் ஒரு சிறு
ஆச்சரியக் குறி!!


இவையாவும் உண்மையாக
இருக்கும் வரை,
போதும் இவை எனக்கு,
ஏணியில் எனை ஏற்றிவிட,
வாழ்வதனில் நாம் ஏற்றம் பெற.........



1 comment:

Durga Karthik. said...

சரியா சொன்னீங்க.தன்னிறைவு தனக்குள்ளும் தன் வீட்டிலும் இருந்தால் வெளியே ஏற்றம் தேட வேண்டாம்.